இந்திய நாட்டின் கலாச்சாரம், போற்றுதலுக்கும், பெருமைக்கும், சிறப்புக்கும், உரியது – ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவா மாநிலம் எப்படி உருவானது? என்பது குறித்த அதன் கலாச்சார நிகழ்வு கிண்டி ராஜ் பவன் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கோவாவின் பாரம்பரிய கலாச்சார நடனங்கள், போர்ச்சு கீசியர்களால் கோவாவில் அவர்களின் ஆதிக்கம் ,அதன் பிறகு ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், பிறகு அது எவ்வாறு விடுதலை பெற்றது? அதன் வரலாற்று கலாச்சார நிகழ்வுகள் கொண்ட கலை, நிகழ்ச்சிகள், சிறப்பாக நடத்தப்பட்டது. கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திய கலைஞர்களுக்கு […]

Continue Reading

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி .

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது – பிரதமர் நரேந்திர மோடி பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்ட போது தமிழகத்தின் குருமார்களின் ஆசி பெற்ற நிகழ்ச்சி ! தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும் . நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும், பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நேரடியாகப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்ததன் மூலம்  நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான் வர்கீஸ் விடையூர் கிராம கரு வேல மரங்களை முழுதும் வெட்டிய பிறகே, கவர்னர் ஆர் என் ரவி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், மற்றும் ஊராட்சிகள் ஆணையர் தாரேஷ் அகமது க்கு ரிப்போர்ட் அனுப்பப் போகிறாரா ? கிராம பொதுமக்கள்.

விடையூர் கிராம பொதுமக்கள் மூலம் அனுப்பப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதன் நகலை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு அனுப்ப ஊராட்சிகள் ஆணையர் தாரேஷ் அகமது, கவர்னர் ஆர் என் ரவி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோர் உத்தரவிட்டனர். ஆனால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் கருவேல மரம் முழுதும் வெட்டி எடுத்து, அந்த வேரையும் நோண்டிய பிறகு அங்கு எதுவும் இல்லை என்று ரிப்போர்ட் அனுப்பலாம் என்று காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார். […]

Continue Reading

கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்ற கவர்னருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியம் என்ன ?

கவர்னர் ஆர் என் ரவி சீர்காழி சட்டநாதர் கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு சிதம்பரம் வழியாக சென்று கொண்டிருக்கும்போது, இடையில் ஆளுநருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கவர்னர் சென்றது கோயிலுக்கு, வேறு ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்று இருந்தாலும் பரவாயில்லை. அவர் சாமி கும்பிட சென்றிருக்கிறார் .அங்கே இவர்கள் கருப்புக்கொடி காட்டி, ஆளுநரே திரும்பிப் போ என்று கோஷம் எழுப்பினார்கள். இதற்கும், இவர்களுடைய கோஷத்திற்கும், என்ன சம்பந்தம்? ஏன்? இவர்கள் ஆளுநரை திரும்பப் […]

Continue Reading

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்குமா ?

நாட்டில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புக்கள், செயல்படுத்த முடியாமல் பொதுமக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாக உள்ளது. அதனால் இனி எந்த அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவச அறிவிப்புகளை அறிவித்தாலும் ,அதை தடை செய்து, இலவச அறிவிப்புக்கள்,அற்ற தேர்தலை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும்.மேலும், இந்த இலவச அறிவிப்புக்கள் அரசியல் கட்சிகள் யாருடைய பணத்தில் இதை அறிவிக்கிறார்கள்? என்பதை எந்த அரசியல் கட்சியினாலும், அதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். இந்த இலவச அறிவிப்புகளுக்கு உழைக்கும் ஒவ்வொரு […]

Continue Reading

தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் – வந்தவாசி நகராட்சி.

வந்தவாசி நகராட்சியில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் துவங்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை இந்த சேமிப்பு கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதை வந்தவாசி நகராட்சி பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் உபயோகமற்ற பொருட்களை இந்த சேமிப்பு கிடங்கில் கொடுக்கலாம். அல்லது அதை எடுத்து வர இயலாதவர்கள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வரும்போது, அவர்களிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் ஜலால், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் தூய்மை இந்தியா திட்டம், […]

Continue Reading

அனைத்து ஊராட்சிகளும் கணினி மயமாக்க தொடர் செய்திகளை வெளியிட்ட முதல் பத்திரிகை மக்கள் அதிகாரம். இதன் பெரும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

மக்கள் அதிகாரம் பத்திரிகையில் முதன் முதலாக வைக்கப்பட்ட முதல் கோரிக்கை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் கணினி மயமாக்கப்பட வேண்டும். இது பற்றிய செய்தி தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாகவே மக்கள் அதிகாரம் பத்திரிகையில் வெளியிட்டு வந்துள்ளேன். இதற்காக பல மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர்களிடம், இக்கருத்தை விவாதித்து இருக்கிறேன்.  தவிர, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது அடிக்கடி பஞ்சாயத்து முறைகேடுகள் பற்றி செய்திகளை வெளியிடும்போது கணினி மயமாக்கப்பட்டால் ,இந்த முறைகேடுகளை குறைக்க முடியும் என்ற செய்திகளை […]

Continue Reading

இன்னொருவர் தரும் 2,000 ரூபாய்த் தாள்களை நீங்கள் வாங்கி மாற்றவோ, உங்கள் வங்கிக் கணக்கில் கட்டவோ வேண்டாம்.  அப்படிச் செய்தால், உங்களுக்கும் தண்டனை காத்திருக்கலாம் – பொதுமக்கள் எச்சரிக்கை அவசியம்.

2000 ரூபாய் பிளாக் மணியாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் ,அரசியல் கட்சியினர், ஆட்சியாளர்கள் ,அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வியாபாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,இது தவிர, கள்ள நோட்டு கும்பல், மோசடி பேர்வழிகள் , கருப்பு பண முதலைகள் ,என பலர் தற்போது கதறிக் கொண்டிருப்பதாக தகவல்.அதனால், 2000 ரூபாய் நோட்டை சம்பளமாக கொடுக்கும் கம்பெனிகள், கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சியில் ஈடுபடலாம். அதை தொழிலாளர்கள் தவிர்ப்பது நல்லது. மேலும் ,தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், […]

Continue Reading

பெண்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் மற்றும் பெண்கள் வாழ்வுரிமை துவக்க விழா .

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேட்டூர்ணிமடம் சந்திப்பில் அமைந்துள்ள சாலோம் பெண்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியும், பெண்கள் வாழ்வுரிமை இயக்க துவக்க விழாவும் நாகர்கோவில் ஒய் எம் சி ஹாலில் நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் தாமோதரன்,( தமிழ்நாடு என் ஜி ஓ கூட்டமைப்பு தலைவர்) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு டேவிட்சன் சபை போதகர் தலைமையேற்று நடத்தினார். தவிர, விழா நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் கலந்து […]

Continue Reading

ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ வைபவம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் வைகாசி அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ வைபவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் அர்ச்சனைகள் நடைபெற்றது. முத்துமாரி அம்மன் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக் காட்சியை காண பெரும் திரளாக அக்கிராமத்தினர் வந்து சாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர் ” வந்தை ” நளினி

Continue Reading