ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது போலி பத்திரிக்கை என்று சொல்லலாமா? - தவெக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ .

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவருடைய பங்களாவுக்கு சென்று குடிபோதையில் தவறாக பேசியதாகவும், ஒரு பத்திரிக்கை செய்தியில் வெளிவந்தால் அதைப் பார்த்து பத்து பத்திரிகைகள் காப்பியடித்து விடுகிறார்கள்.
அது உண்மையா? பொய்யா? என்பது கூட காப்பியடிப்பவர்களுக்கு தெரியவில்லை. மேலும், இந்த காப்பியை பார்த்து உடனே கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த் போன்றோர் லெட்டர் பேடிலே காப்பி அடித்து, இந்த போலி செய்தியை, உண்மை போல், பத்திரிகைகளுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,எம் எல் ஏ குறுஞ்செய்தி அனுப்பினார?என்ன செய்தியை அனுப்பினார்? தவறாக அனுப்பினாரா ? அதை பத்தி போலீசிலோ அல்லது உயர் அதிகாரிகள் மட்டத்திலோ அல்லது முதல்வருக்கோ மாவட்ட ஆட்சியர் பத்மஜா புகார் அனுப்பி இருக்கிறாரா? எதுவுமே இல்லை.
தவிர,எப்படி இந்த செய்தி எல்லாம் உண்மை என்று மக்கள் மத்தியில் பத்திரிகைகள் வெளியிடுகிறது?
மேலும்,உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாமல் பத்திரிகை நடத்திக் கொண்டிருப்பது மக்களை முட்டாளாக்கும் வேலை பார்ப்பது பத்திரிக்கை வேலையல்ல.
தவிர,உண்மையை வெளிப்படுத்துவது தான் பத்திரிகையின் வேலை. மக்களை குழப்பி! அவர்களை உண்மை தேட வைப்பது பத்திரிக்கையின் வேலை அல்ல. நாட்டில் போலி அரசியலுக்கு! இப்படிப்பட்ட பத்திரிகைகளும், துணையா?
பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.
தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply