உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்குமா? - திருமாவளவன்.

திருமாவளவன் சிறுபான்மை மக்களின் மதவாத சக்தியா?
எப்படி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தில் மதவாத சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்தும்? அதுக்கு இவரால் விளக்கம் தர முடியுமா?
அப்படி என்றால் இவருடைய அரசியல் சிறுபான்மை மக்களின் மதவாத சக்தி என்பதை வெளிப்படையாக தெரிவித்து விட்டார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

மேலும் ,இந்துக்களின் பாரம்பரியமிக்க கோவிலாக உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் மலை மீது உள்ள தீபத்தூணில், தீபம் ஏற்றுவது மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறதா?
அதுவும், உச்சநீதிமன்றம் தெளிவாக மத்திய அரசின் CISF காவல் பாதுகாப்பு படையுடன் தீபம் ஏற்றலாம் என்று தெரிவித்துள்ளது.
இதில் இங்கு உள்ள காவல்துறை ஒருவேளை அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், சரியான பாதுகாப்பு தராவிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை இவர்களே அதற்கு வழி வகுத்து விட்டால் என்ன? செய்வது என்று ஆய்வு செய்துதான் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை கொடுத்திருக்கிறது.
மேலும் ,இப்போதாவது திருமாவளவன் போன்ற சிறுபான்மை மதவாத சக்திகளுக்கு, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்த கருத்துக்கு இந்துக்கள் நிச்சயம் பதில் கொடுப்பார்கள்.
மேலும்,எப்போது இந்துக்களின் கோயில்கள் , மற்றும் இந்துக்கள் தேவைப்படுகிறார்கள்? என்றால்!தேர்தல் வரும்போது தேவைப்படுகிறதா? மேலும், அவர்களின் ஓட்டும், அப்போதுதான் தேவைப்படுகிறதா?
ஆனால் ,அந்த மக்கள் வழிபடக்கூடிய ஆலயம் மட்டும் தீபம் ஏற்றி வழிபடுவது நிராகரிக்கப் பட வேண்டுமா ? திருமாவளவன். அப்படி என்றால் ,உன்னுடைய அரசியல் பிம்பம் சிறுபான்மை மதவாத சக்தியா? - ஆன்மீக பக்தர்கள்.
பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.
தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply