Breaking News
E-book MAKKAL ADHIKARAM E - BOOK OCT 2026 Published E-book Makkal Adhikaram - June 2026 Published துப்பாக்கியால் பயங்கரவாதியை வீழ்த்துவது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. ஆனால்! பயங்கரவாதத்தை உருவாக்கும் சிந்தனை, பணப்பாதை, ஆயுத விநியோகம், சர்வதேச வலைப்பின்னலை  ஒழிப்பதுதான் நிரந்தரத் தீர்வு - மத்திய அரசு. • நீட் தேர்வை ரத்து செய்வதால், மருத்துவ கல்வியின் தரம் மேம்பட்டு விடுமா? மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் சமூக நீதி கிடைக்குமா? - அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி. • உயர் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கொடுத்தும் அரசாங்கம் மறுப்பது ஏன்? • தேசிய பத்திரிகையாளர்கள் தினம்! முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த, முதல்வர் விஜய்க்கு சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள் - ஆசிரியர் மக்கள் அதிகாரம். • அதிமுக ,திமுக சேர்ந்து தவெக ஆட்சியை கவிழ்க்க சட்டமன்றத்திலே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கலைக்க முடியுமா?
உயர் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கொடுத்தும் அரசாங்கம் மறுப்பது ஏன்?
17 Nov 2026 / 0 Comments

உயர் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கொடுத்தும் அரசாங்கம் மறுப்பது ஏன்?

தமிழ்நாடு

1001562873.jpg

உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் தமிழக அரசுக்கு என்ன சிக்கல்? இதுதான் முருக பக்தர்களின் கேள்வி?

 மேலும், நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக,தவெக அரசு நிர்வாகம், பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு நீதி கிடைக்குமா?

1001562883.jpg

தவிர இதில்,நீதிமன்றம் தெளிவாக உத்தரவு கொடுத்துள்ளது. அது என்ன என்றால்? திருப்பரங்குன்றம் மலைத்தூண் தீபம் ஏற்றுவதற்கான தீபத்தூண் எனக் குறிப்பிட்டது.

அந்தத் தூண் அமைந்துள்ள பகுதி கோயிலுக்குச் சொந்தமான நிலப்பகுதி என்று தீர்மானித்தது.

இதில் தர்காவின் உரிமைக்கு ,இடையூறு ஏற்படுத்தாமல், அங்கு தீபம் ஏற்றலாம் என்று தெரிவித்தது.

இருப்பினும், அங்கு
சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தைக் கூறி நீதிமன்ற உத்தரவைத் தடுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியது. 

மேலும்,அப்படி இருந்தும் எதற்காக? இரண்டு அரசு நிர்வாகமும் ,இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு மனு போட்டுக் கொண்டிருக்கிறது?

மேலும்,உங்களால் இந்த கோயிலை நிர்வாகம் செய்ய தகுதி இல்லை என்றால், தொல்லியல் துறையில் ஒப்படைத்து விடுங்கள்.

இந்துக்களின் கோயில் காணிக்கை மட்டும் அரசாங்கத்திற்கு எடுத்து செலவு செய்ய உரிமை இருக்கிறது. ஆனால், அந்த உரிமை பக்தர்கள் வழிபட அதற்கான வழிவகைகளை ஏற்படுத்தாமல் ,இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்திலே மனு போட்டுக் கொண்டிருப்பீர்களா?

மேலும்,மக்கள் எத்தனை நாளைக்கு இப்படிப்பட்ட அரசாங்க நிர்வாகத்தின் தவறுகளை பார்த்துக் கொண்டிருப்பார்கள்? சொல்லப்போனால், திமுக அரசும், தற்போதைய தவெக அரசும், மதச்சார்பற்ற அரசு என்று மக்களிடம் சொல்லி வருகிறது.

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து முஸ்லிம் மதத்திற்கு ஆதரவாக இவர்கள் செயல் படுகிறார்கள் என்று தான் முருக பக்தர்கள் தெரிவிக்கும் கருத்து.

1001542193.jpg

மேலும்,முதல்வர் விஜய்க்கு உண்மையிலே முருகன் மீது நம்பிக்கையும் ,பக்தியும் இருந்தால் ,நீங்கள் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

இல்லை எல்லோரும் போல் ஓட்டுக்காக அரசியல் என்றால் செய்து விட்டு போங்கள்.

அதற்கான வேலையை அந்த வேலவனே பார்த்துக் கொள்வார். வேலவனை மீறி எந்த ஒரு ஆட்சி அதிகாரமும் அசைத்துக் கூட பார்க்க முடியாது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் வேறு, முருகனின் அதிகாரம் வேறு ,அவன் இந்த உலகத்தையே ஆட்சி செய்பவன்.

1001555979.jpg

மேலும்,திமுக செய்த தவறுக்கு முருகன் கொடுத்த தண்டனை! ஆட்சியிலிருந்து அதற்கு தூக்கி  எறியப்பட்டார்கள்.

 அதேபோல் முருகன் உங்களுக்கும் நாள் குறித்து விடுவார். முருகனிடம் உங்கள் அதிகாரம் செல்லுபடி ஆகாது.

மேலும்,திருச்செந்தூரில் போய் ஜெயிக்க வேண்டும் என்று காலில் விழுந்த விஜய்! இன்று திருப்பரங்குன்ற தீபத்தூணில், தீபம் ஏற்றுவதால் தமிழகத்திற்கு என்ன நஷ்டம்? அங்கு இருக்கிற தர்காவுக்கு என்ன நஷ்டம்? முஸ்லிம்களுக்கு என்ன நஷ்டம்? இல்லை இந்த அரசுக்கு என்ன நஷ்டம்?

இதை முதலில் நீதிமன்றம் கேள்வியை எழுப்பி இருக்க வேண்டும்.மேலும், இவர்கள் சொல்வது நஷ்டக் கணக்கு அல்ல, என்ன சொல்லிக் கொண்டு வருகிறார்கள்?

 தொடர்ந்து மத மோதல் ஏற்படும் என்று தெரிவிக்கிறார்கள். மத மோதல் எப்படி ஏற்படும்? பக்தர்கள் போய் அங்கு தீபத்தூணில் தீபம் ஏற்றினால், தானே இரண்டு மதங்களை சேர்ந்தவர்கள், மோதல்களை உருவாக்கி விடுவார்கள்.

 நீதிமன்றமும் தெளிவாக சொல்லி இருக்கிறது. தீபம் ஏற்றுவதால் எந்த மத மோதலுக்கும் அங்கே இடம் கிடையாது. இந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது.? அப்படி இருக்கும்போது இதற்குள் என்ன அரசியல்?

முதல்வர் விஜய்க்கு யாரோ தவறான வழியை காட்டி ஆலோசனை சொல்கிறார்களா? அப்படி இருந்தால் ,நிச்சயம் அது இவருக்கு மைனஸ் ஆக தான் அமையும்.

அதை மாற்றிக் கொள்வது .நல்லது. அதுமட்டுமல்ல, முருகனிடம் மோதுபவர்கள் ,நிச்சயம் ஏதோ அவர்களுக்கு நேரம் சரியில்லாதவர்கள் தான் முருகனிடம் மோதுவார்கள்.

எனவே,இனிமேல் வேலனே! இந்த வேலையை பார்த்துக் கொள்வார். அதிகாரமா? சட்டமா? முருகனின் சத்தியா?இதில் எது ஜெயிக்கப் போகிறது? பொறுத்திருந்து பாப்போம்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer)

பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.

தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.