கட்டப்பஞ்சாயத்து வக்கீல்கள் கூட்டம் நீதிமன்ற வளாகத்திலே, அடித்துக் கொண்டதை நீதித்துறை நடவடிக்கை எடுக்குமா? - நீதித்துறை.

நாட்டில் கட்டப் பஞ்சாயத்து வழக்கறிஞர்கள் கூட்டம், ஏதோ ஒரு அரசியல் கட்சி பின் பலத்தை கொண்டவர்கள்.
பெரும்பாலும் ஜாதி கட்சியின் பின்புலத்தில் தான், இவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் எழும்பூர் நீதிமன்றத்தில் இவர்கள் வைத்தது தான் சட்டம் என்று சொல்லும் அளவில் இருந்து கொண்டிருக்கிறது.

இல்லையென்றால் நீதிமன்ற வளாகத்தில் இந்த கட்டப்பஞ்சாயத்து வழக்கறிஞர்கள், சட்டையை கிழித்து கொண்டிருப்பார்களா?
இவர்களால் ஒரு வழக்கும் ஜெயிக்கும் முடியாது. நீதிபதியை போய் தொங்கிக் கொண்டிருப்பார்கள். சட்டப்படி அதை எதிர்கொள்ளவும் ,தகுதி இல்லாமல் ,இப்படி சண்டை போட்டுக் கொள்வது, நீதித்துறைக்கே அவமானம்.
மேலும்,சட்டத்தின் அறிவைக் கொண்டு, தீர்மானிக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய வழக்கறிஞர்கள், உடம்பில் வலிமையைக் காட்டி சண்டை செய்திருப்பது, இவர்களெல்லாம் வழக்கறிஞர்கள் என்று சொல்வதற்கு தகுதி உள்ளதா?
மேலும்,ஒரு வழக்கறிஞர் சட்ட நுணுக்கங்களை தெரிந்தவர் .சட்டத்தின்படி போராடுபவர். அவர்தான் வழக்கறிஞர். அதுமட்டுமல்ல,
நீதிமன்றத்தில் தான் ஒருவரை ஒருவர் உங்கள் கட்சிக்காரர்களுக்காக ஆவேசமாக ஒரு வழக்கில் பேசிக் கொள்வார்கள்.
ஆனால், வெளியில் வந்து, இருவரும் ஒன்றாக நண்பர்களாக இருப்பார்கள். அது அவர்களுடைய தொழில்.
இந்த கட்டப்பஞ்சாயத்து கூட்டம், அரசியல் பின் புலத்தையும், ஜாதியின் பின் புலத்தையும் வைத்து, சட்டத்தைப் படிக்காமல், நீதித்துறையும், சமூகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் போலிகள் எல்லாம் நீதித்துறையில் இருப்பது நீதித்துறைக்கே களங்கம். இதையெல்லாம் நீதித்துறை களை எடுக்க வேண்டும்.
மேலும்,சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், சட்ட படிப்பு முடித்தவுடன் நீதிமன்றத்தில் தங்களை வழக்கறிஞராக பதிவு செய்வார்கள். அப்படி பதிவு செய்தவர்கள்,
நீதிமன்றத்தில், மூன்று வருடத்திற்குள், எந்த வழக்கும், ஜெயிக்காமல் இவர்கள் எல்லாம், வழக்கறிஞர்களாக நீதித்துறை சொல்வது, அவர்களை வைத்து, அரசியல் கட்சிகள் போல் வாக்களிக்க அதிகாரம் கொடுப்பது, தேவையற்றது.
ஒரு வழக்கும் ஜெயிக்க முடியாதவன், எதற்கு வக்கீல் என்று பெயரை போட்டுக் கொள்வது? இதனால், உண்மையான, தகுதியான வழக்கறிஞர்கள், பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும் ,அப்பாவி மக்கள் இவர்களுடைய தகுதி என்ன ?என்று கூட தெரியாமல், இவர்களிடம் சிக்கிவிட்டால் ,அவர்கள் நிலைமை என்ன ஆவது? அவர்களுக்கு நீதி கிடைக்குமா?
நீதியை எதிர்பார்க்கும் மக்களுக்கு நீதிமன்றத்தில் ஏமாற்றம்தான். அதனால் நீதித்துறை இவர்களை எல்லாம் வரைமுறைப் படுத்துவது, முக்கியமானது.

மேலும்,எதிர்கால நீதித்துறைக்கான முக்கிய கட்டமைப்பு உருவாக்குவது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் நீதித்துறையை நம்பி மக்கள் வாழ முடியும். அது மட்டுமல்ல, கடைநிலை மக்களின் நம்பிக்கையே நீதித்துறை தான்.
பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.
தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply