கடந்த 25 ஆண்டுகளில் ஊடகத்துறையில் மிகப்பெரிய மாற்றம் - பிரதமர் நரேந்திர மோடி .

ஊடக வளர்ச்சி என்பது பெரிய நிறுவனங்களின் வளர்ச்சி மட்டுமல்ல,சிறிய பத்திரிகைகள், சமூக நலன் சார்ந்த ஊடகங்கள், சுயாதீன செய்தியாளர்கள், ஆகியோருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதில்தான் அதன் உண்மையான அர்த்தம் இருக்கிறது.

மேலும்,அதை மத்திய மாநில அரசு என்னும் சரி செய்யவில்லை ஏன் ? தவிர, ஊடக
தொழில்நுட்பம்! ஊடகத்திற்கு வேகத்தைக் கொடுக்கலாம். ஆனால், உண்மையும், நேர்மையும் தான் ஊடகத்திற்கு நம்பகத் தன்மையைக் கொடுக்கின்றனவா? என்பதுதான் முக்கியம்.
அதாவது
இந்த விவாதத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன், ஊடகங்கள் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமா? எதிராக இருக்க வேண்டுமா? என்பது கேள்வியல்ல, மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டுமா? என்பதுதான் முக்கிய கேள்வி?

பெரிய ஊடக நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய பொருளாதார நெருக்கடிகள்...!
செய்தியாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சட்ட உதவி குறைபாடுகள்.
இணையதளத்தை நடத்துவதற்கான தொழில்நுட்பச் செலவுகள்...?
செய்திகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்து வெளியிடுவதற்கான மனிதவளப் பற்றாக்குறை இவை அத்தனையும் சமூக நலன் ஊடகங்களுக்கு மிகப்பெரிய சவால்கள்.

எனவே ,ஊடக வளர்ச்சி என்பது தொழில்நுட்ப வசதி கொண்ட நிறுவனங்களின் வளர்ச்சியாக மட்டும் இருக்கக்கூடாது.
சிறிய, சுயாதீன, சமூக நலன் சார்ந்த ஊடகங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான் சமூக நலன் பத்திரிகைகளின் நீண்ட நாள் கோரிக்கை. மேலும்,
ஒரு நாட்டின் ஊடக வளர்ச்சி என்பது அதன் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கையாலும், இணையதளங்களின் எண்ணிக்கையாலும், சமூக வலைதளப் பார்வையாளர்களின் எண்ணிக்கையாலும் மட்டும் அளவிடக்கூடாது.

அது எதிர்கால இந்திய ஊடகத்துறை! ஐந்து அடிப்படைக் கொள்கைகளில் பயணிக்குமா? என்பதுதான் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளின் முக்கிய பத்திரிகைத் துறையின் வளர்ச்சியாக பார்க்க முடியும். அதாவது,
தொழில்நுட்ப வளர்ச்சி.
பத்திரிகைச் சுதந்திரம்.
உண்மையான புலனாய்வுச் செய்தியியல்.
சிறிய ஊடகங்களுக்கான சம வாய்ப்பு.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
மேலும்,அரசின் திட்டங்கள் உண்மையில் மக்களைச் சென்றடைகின்றனவா ?என்று கண்காணிப்பது,
மக்களின் குறைகளை ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்வது,
மேலும்,அதிகாரத்தில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் கேள்வி கேட்பது,
அரசின் சாதனைகளை வெளியிடுவது, ஊடகத்தின் ஒரு பணி.
அது அரசின் விளம்பரத் துறையாக மாறுவது ஊடகத்தின் முழுப் பணி அல்ல. என்பதை மத்திய மாநில அரசின் செய்தித்துறை எப்போது புரிந்து கொள்வார்கள்?

இன்று வரை மத்திய மாநில அரசின் செய்தித்துறை! தகவல் விளம்பர துறையாக தான் உள்ளது. இந்த உண்மை தகுதியான ஜர்னலிஸ்டர்களுக்கு புரியும்.

இந்த வேறுபாட்டைப் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய, மாநில அரசின் செய்தி துறையும்,அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுதான் உண்மையான ஊடகத்துறையின் வளர்ச்சி.
பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.
தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply