குடிபோதையில் இளம்பெண்ணைக் கட்டிப்பிடித்து எல்லை மீறிய காவலர்… விசாரிக்க சென்ற போலீசாரிக்கும் கொலை மிரட்டல்!
நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram

ஈரோடு மாவட்டத்தில் குடிபோதையில் இளம்பெண்ணைக் கட்டிப்பிடித்து தகாத வார்த்தைகளால் பேசிய காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காவலாக இருக்க வேண்டிய காவலரே இப்படி குடிபோதையில் அருவருக்கத்தக்க வகையில் நடந்துக் கொண்டது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அத்தாணியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இவர், அந்தியூர் அருகே வசித்து வரும் இளம்பெண் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அந்த பெண்ணை பொது இடத்தில் கட்டிப்பிடித்து தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்து வந்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் இது குறித்து அருகில் இருந்த அந்தியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசாரை கார்த்தி தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது சட்டையைக் கிழித்து அவர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். மேலும் உடன் சென்ற போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதையடுத்து கார்த்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு குடிபோதையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கார்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply