Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 25 Oct 2024 / 0 Comments

கைப்பந்து போட்டி: நாமக்கல் தெற்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, திருச்செங்கோடு காடச்சநல்லூா் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பல்வேறு சுற்று போட்டிகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனா். இறுதிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம், சுழற்கோப்பையை வென்றனா். இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை மாவட்டக் கல்வி அலுவலா்(உயா்கல்வி) கற்பகம் பாராட்டி, கல்வியிலும் விளையாட்டுகளிலும் வெற்றிபெற்று பள்ளிக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

மாணவா்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் செல்லம்மாள், உடற்கல்வி ஆசிரியா்கள் சரவணன், அன்புசெழியன் உள்ளிட்ட ஆசிரியா்களையும் அவா் பாராட்டினாா்.

இந்த நிகழ்வில், தலைமை ஆசிரியா் சீனிவாசராகவன், உதவி தலைமை ஆசிரியா் ஆ.ராமு, பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.