கும்பமேளாவில் பக்தியின் மூடநம்பிக்கையால், கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி.
ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram

கடவுளை வணங்குவதற்கு பத்தி மூடநம்பிக்கையாக இருக்கக் கூடாது. ஏனென்றால் பக்தி என்பது இறைவனிடம் உண்மையான அன்பு ,உண்மையான நேசம், கடவுளிடம் எதிர்பார்ப்பு, உண்மையான அன்பும் விலை பேசும் பக்தியாக அது இருக்கக் கூடாது.
கடவுள் பணத்திற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு பணம் தேவையில்லை. பணம் மனித வாழ்க்கைக்கு தான் பணம் தேவை. இங்கே தான் பக்தி வியாபாரம் ஆகிறது. மற்றொரு புறத்தில் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவில் குளிப்பதற்காக சாதுக்களும், சந்நியாசிகளும் உயர் பதவியில் இருப்பவர்களும், சென்று குளிக்கிறார்கள். அதனால், தனக்கு பெரிய செல்வம் செல்வாக்கு கௌரவம் வந்துவிடும் என்று நினைத்து கோடிக்கணக்கான பேர் வருகிறார்கள்.
அப்படி சென்று இது போன்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரை விடுவது வேதனையான, தாங்க முடியாத ஒரு கொடுமை. தற்போது கூட்ட நெரிசலில் எவ்வளவு பேர் இறந்தார்கள்? என்பது இன்னும் சரியாகத் தெரியாது.ஆனால், வெளியில் சொல்வதோ வெறும் 30 பேர் என்று தான் சொல்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட கூட்ட நெரிசலில் கடவுளை வணங்கவும் முடியாது.

உண்மையான பக்திக்கு கடவுள் பக்தனை தேடி வருவார். உண்மையான பக்தி இல்லாமல் நீ கடவுளை தேடினாலும் கடவுள் உன் கண்ணுக்கு தெரிய மாட்டார். அதுதான் தற்போதைய ஒரு பாட்டில் கல்லைக் கண்டால் கடவுள் தெரியாது. கடவுளைக் கண்டால் கல் தெரியாது. எனவே, மக்கள் கடவுள் மீது பழி போட்டுவிட்டு ,நீங்கள் செய்த தவறுக்கு பழி போட்டு தப்பிக்க நினைக்க வேண்டாம்.
மேலும்,கும்பமேளாவிற்கு சென்று திருவேணி சங்கமத்தில் மூழ்கி நீராடினால் முக்தி கிடைத்து விடும் என்று ஒரு நம்பிக்கையில் தான் சொல்கிறீர்கள். தவறில்லை. ஆனால் ஞானம் கிடைக்காமல் முக்தி அடைய முடியாது. ஒருவன் பல பிறவிகளில் கற்ற ஞானம் மகான்களாக, சித்தர்களாக தெய்வீக நிலையை அடைகிறார்கள்.
அது போல்தான் கடவுளை வணங்கி வழிபட்டு, பல பிறவிகளில் செய்த புண்ணியங்கள், தெய்வ வழிபாடுகள் மூலம் தான் இறைவனை அடைய முடியும். ஆனால், ஒரே நாளில் நதியில் மூழ்கி நான் முத்தி, மோட்சம் அடைந்து விடலாம் என்பது அது ஒரு குருட்டு நம்பிக்கை. அப்படி யாரும் அடைய முடியாது.
மேலும், வாழ்க்கையின் செல்வ வளம் அதற்கு கடவுள் காட்டும் வழி, எதுவானாலும் விதி, வழி கர்ம வினைகளால் மட்டுமே அது சாத்தியம். அதனால், இப்படி கூட்ட நெரிசலில் போய் உயிரை விடுவது எந்த பிரயோஜனமும் இல்லை.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply