கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகை தொலைக்காட்சிகள் பத்திரிகை சுதந்திரத்தை அரசியல், அதிகாரத்திற்குள் தவறாக பயன்படுத்துகிறதா? - சமூகநலன் பத்திரிகைகள்.

மக்களாட்சியில் மக்களே எஜமானர்கள். ஆனால், மக்கள் வாக்களித்து பதவி அதிகாரத்திற்கு வந்தவுடன், மக்களை அதிகாரம் செய்வது,
சட்டத்தை மதிக்காமல் ஆட்சி செய்வது, ஊழல் ஆட்சி செய்வது, சமூக நீதியை தவறாக பயன்படுத்துவது, முறையற்ற ஆட்சி செய்து சட்டம் ஒழுங்கை , கேள்விக்குறியாக்குவது,
போலி அரசியல் செய்வது, சட்டத்தை ஏமாற்றி ஊழல் செய்வது, இது எல்லாம் தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டு கால அதிமுக , திமுக,அரசியல் கட்சிகளின் ,ஆட்சி! வரலாற்றுப் பிழை.
இதையெல்லாம் மக்களிடம் தெரிவிக்காத கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அவர்கள் எவ்வளவு பொய் சொன்னாலும், அதுதான் செய்தி என்று மக்களிடம் கொண்டு போய், இந்த பொய் செய்திகளை பரப்பியது தான் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான ஒன்று.
மேலும்,பத்திரிக்கை சுதந்திரம் என்பது மக்களிடம் உண்மையை வெளிப்படுத்துவதற்கு தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, பொய்களை பரப்புவதற்கு பத்திரிகை சுதந்திரம் தேவையில்லை.

மேலும்,இந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி அரசியல், ஆட்சி, அதிகாரம் யார்? கையில் இருக்கிறதோ எந்த அரசியல் கட்சி, ஆட்சிக்கு வருகிறதோ அவர்களின் அரசியலுக்குள்,
இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் சுயநலத்திற்காக பத்திரிக்கை துறையையும் , செய்தி துறையில் சேர்ந்து வியாபாரம் ஆகிவிட்டார்கள்.மேலும்,
வெள்ளக்காரன் காலத்தில் போடப்பட்ட இந்த சர்குலேஷன் சட்டம் அப்படியே பாதுகாக்கிற ஒரே துறை மத்திய மாநில அரசின் செய்தி துறையா?

மேலும், இந்த வியாபாரத்திற்குள் எத்தனை பொய்? எத்தனை உண்மை? என்பதை மக்களால் தேடி கண்டுபிடிக்க முடியாது.
கராணம் ,அவர்கள் என்ன ஒவ்வொருவரும் பத்திரிகையிலே , பணியாற்றியவர்களா? 30 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் கூட கண்டுபிடிக்கப்பட முடியாத உண்மைகள் சாதாரண பாமர மக்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும்
ஏனென்றால், இதில், பத்திரிகையின் சுயநலமும் ,அரசியல் ஆட்சி அதிகாரத்தின் சுயநலமும், நாட்டில் ஊழலை மறைமுகமாக வளர்ந்துள்ளது.
மேலும், அதற்கு இன்று வரை, மத்திய மாநில ,அரசின் செய்தித் துறை, விடை தேடாமல், வெறும் வெத்து , விளம்பரங்களை ஊடக செய்திகளாக, மக்களிடம் செய்தி என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்குள் தான் அரசியல்வாதிகளின் சுயநலமும், இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் என்று சுயநலமும்,

மறைமுகமாக ஒன்றிணைந்து பத்திரிக்கை உலகத்தையும், ஏமாற்றுகிறது. பத்திரிக்கை சுதந்திரத்தையும் ஏமாற்றுகிறது.
அது மட்டுமல்ல நாட்டில்,பல ஆயிரம் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தை செய்தி துறையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
மேலும் ,இதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் இன்று செய்தி துறையில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களாக சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இது பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் எவ்வளவோ செய்திகள் கட்டுரைகள் வெளியிட்டு இவர்களுக்கு பாடம் எடுத்தாலும், அந்த வெத்து விளம்பரமே செய்தி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு உதாரணமாக தற்போது திருமாவளவன் ஒரு பேட்டியில் சொல்கிறார் சங் பரிவார்களின் கூட்டு சதியால், EVM மெஷின் மூலம், மிகப்பெரிய வாக்குத் திருட்டு, மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ,பத்திரிக்கையில் ஒரு தவறான செய்தி வெளி வந்தால், இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கும் அரசியல் கட்சியினர் ,இதற்கு மட்டும் ஏன்?
ஆதாரத்தை அவர்கள் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இடமோ அல்லது தங்களது கட்சியின் அறிக்கைகளின் மூலமோ கொடுப்பதில்லை.
தவிர,நீங்கள் ஒரு அரசியல் கட்சி, இன்னொரு அரசியல் கட்சியை பற்றி விமர்சனம் செய்யும் போது, ஆதாரம் கொடுக்கறீர்களோ இல்லையோ, அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம், இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம்.

ஆனால், ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் ஆணிவேராக இருக்கக்கூடிய தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்துவது, அதற்கான ஆதாரத்தை நிச்சயம் இவர்கள் கொடுத்தாக வேண்டும்.
அது மட்டுமல்ல ,தேர்தல் ஆணையம் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, அதற்கான ஆதாரத்தை கொடுப்பது மட்டுமல்ல, உண்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், அவர்களுக்கு நீதிமன்ற சம்மன் செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும் சேர்த்து,அனுப்ப வேண்டும்.
ஏனென்றால், அரசியல் கட்சி என்ற முறையில் ஒருவர் எதை வேண்டுமானாலும் ,பேசிக் கொண்டிருக்கலாமா? பத்திரிக்கை என்றால் அரசியல் கட்சியினரின் எவ்வளவு பொய்களை வேண்டுமெனாலும் வேத்து விளம்பர செய்தியாக மக்களை ஏமாற்றலாமா?மேலும்,

அது தான் செய்தி என்று இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றலாமா? எனவே, இதில் மத்திய மாநில அரசின் செய்தித்துறையின் தவறு என்ன? என்பதை இனியாவது புரிந்து கொள்வார்களா?
மேலும் ,பத்திரிகை உலகம் பத்திரிக்கையின் சுதந்திரத்தை, மக்களை ஏமாற்ற பயன்படுத்தலாமா? உண்மை எது? எது பொய் என்று வெளிச்சத்திற்கு கொண்டு வருவது தான் பத்திரிக்கை,

ஆனால் ,இருட்டுக்குள் பத்திரிக்கை நடத்தி, மக்களில் இருட்டாக இருப்பவர்களை, வைத்து பத்திரிக்கை வியாபாரம் செய்து ,லாபம் சம்பாதிப்பது பத்திரிக்கையின் திறமை அல்ல, அது பெரிய பத்திரிகை என்ற அடையாளம் அல்ல.
மேலும் , இதற்காக பல ஆயிரம் கோடி, 500 கோடியில் பத்திரிக்கை நடத்தினாலும், இருட்டுக்குள் பத்திரிக்கை நடத்திவிட்டு, சர்குலேஷன் காட்டுவது, பெரிய திறமை அல்ல.

இந்த உண்மைகள்! பொது மக்களுக்கும், பத்திரிகை உலகத்திற்கும், செய்தி துறைக்கும், இந்த உண்மை புரிந்து இருக்கிறதா?
பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.
தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply