Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 14 Oct 2024 / 0 Comments

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை ஜோர்… ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

சமூகம்

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram

 கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம் .

கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்ததால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து 69 பேர் உயிரிழந்த வேதனை மறையும் முன்பு, மீண்டும் அதே பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனைநடந்து வருவதாக குற்றம்சாட்டிய மக்கள் உடனடி நடவடிக்கை தேவை என கோரிக்கை வைத்தார். கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசுத் தரப்பில் இருந்து உத்தரவு போடப்பட்டது. இதன் காரணமாக போலீசார் கள்ளச்சாரயத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன்ர்.

இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதியின் உத்தவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வராயம் மலைப்பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்ஆய்வாளர் ஏழுமலை, உதவி ஆய்வாளர் மணிபாரதி ஆகியோர் தலைமையில் தும்பராம்பட்டு மற்றும் வெள்ளரிக்காடு ஆகிய கிராமங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது லாரி டியூப், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 60 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 100 லிட்டர் ஆகியவற்றை கண்டுபிடித்த போலீசார், கைப்பற்றிய சாராய ஊரலை சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தசின்னையன் (58) மற்றும் வெள்ளரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை(27) ஆகிய இருவரையும் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் பலப்பேர் உயிரிழந்த நிலைய் இது போன்ற சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்து சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.