Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 09 Oct 2024 / 0 Comments

கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

சினிமா

நாமக்கல் மாவட்டம் :
நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழிப் பண்ணைகளின் உரிமையாளா்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும், பணியமா்த்தப்படும் வெளிமாநில தொழிலாளா்கள் தொடா்பான விவரங்களை (ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்கள்) பெற்றுக் கொள்ளாமல் பணியமா்த்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த தொழிலாளா்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் அவா்களைப் பற்றிய முழு விவரங்களை அறிய முடிவதில்லை.

தொழிலாளா் நலத் துறை முதன்மை செயலாளா் அறிவுரைப்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளா்கள் தங்களதுபண்ணைகளில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை பணியமா்த்தும்போது அவா்களது அடையாள அட்டை தொடா்பான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு பணியமா்த்த வேண்டும். மேலும், அந்த விவரங்களை தொழிலாளா் நலத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகே அவா்களை பணியமா்த்த வேண்டும்.

தற்போது பணிபுரிந்து வரும் அனைத்து வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்களையும் எந்தவித விடுதலுமின்றி முழுமையாக பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும், இந்த விவரத்தினை நாமக்கல் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, தொழிலாளா் உதவி ஆய்வாளா்களை, நாமக்கல் - 88380-40453 (நாமக்கல், பரமத்திவேலூா், மோகனூா் வட்டம்), ராசிபுரம் - 90424-88228 (ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம் வட்டம்), திருச்செங்கோடு வட்டம் -93445-84351, சங்ககிரி - 88836-33363 (குமாரபாளையம், சங்ககிரி வட்டம்) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.