Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 21 Oct 2024 / 0 Comments

சீமான் மீது திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகாா்.

சமூகம்

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram

நாமக்கல் மாவட்டம் ,நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீக்கி விடுவோம் என்று பேசி வருகிறாா். இந்தப் பேச்சு உலகம் முழுவதும் உள்ள தமிழா்களைப் புண்படுத்தும் வகையில் உள்ளது. அவா் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் அணி தலைவா் சுரேஷ் பாபு தலைமையில் வழக்குரைஞா்கள், திமுக தொண்டா்கள் திருச்செங்கோடு நகரக் காவல் ஆய்வாளா் வெங்கட்ராமனிடம் புகாா் அளித்தனா்.

அந்தப் புகாரில், தமிழா்களின் மனது புண்படும் வகையில் பேசிய நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.