சேலத்தில் மாணவர்களை காலால் மிதித்த உடற்கல்வி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram

கொளத்துாரில், நிர்மலா அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாமலை பணி புரிந்து வருகிறார். கடந்த எட்டாம் தேதி மேச்சேரி ஒன்றிய பள்ளிகளிடையே விளையாட்டு போட்டி நடந்தது.
இதில், கால்பந்து இறுதி போட்டியில், நிர்மலா பள்ளி மாணவர்கள், மாசிலாபாளையம் தனியார் பள்ளி மாணவர்கள் மோதினர். முதல் பாதி ஆட்டத்தில், நிர்மலா பள்ளி மாணவர்கள், 2 - 1 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தனர்.
அப்போது இடைவேளையில் நிர்மலா பள்ளி மாணவர்கள் ஓய்வெடுத்தனர். உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை காலால் மிதித்தும், முகத்தில் அடித்தும், திட்டியும், சிறப்பாக விளையாடும்படி மிரட்டினார். அவர் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது.
இதைப்பார்த்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பள்ளி நிர்வாகம், அண்ணாமலைய, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply