டாஸ்மாக் மது கடை பணியாளர்கள் விரைவில் பணியிட மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு.

டாஸ்மாக் மதுக்கடை பணியாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால், அவர்கள் பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் சிபாரிசு பேரில் பலர் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணி புரிவதாக அரசுக்கு தகவல் தெரிய வந்துள்ளதால், இந்த இடமாற்றம் அவசியமானது என்று அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.
அதனால்,4048 டாஸ்மாக் மதுக்கடையில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள், விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல்.
இது தவிர, பலர் பணிக்கு வராமலே சம்பளம் வாங்குவதாகவும் அரசுக்கு தெரிய வந்துள்ளது.
எனவே, இந்த மாற்றம் டாஸ்மாக் கடைகளில் மிகவும் அவசியமான ஒன்று என அரசியல் வட்டார தகவல்.
பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.
தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply