Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
Reporter / 04 Jul 2024 / 0 Comments

தேசத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பணத்திற்கும் மத அரசியலுக்கும் ஏமாறாமல் அந்நிய சக்திகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வார்களா ?

இந்தியா

ஜூலை 05, 2024 • Makkal Adhikaram

 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியை ஜெயிக்க விடாமல் தடுக்க சைனா 70,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது .

மேலும், மக்கள் அதிகாரம் இணையதள செய்திகளில் தேர்தலுக்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க அந்நிய சக்திகள் மறைமுகமாக வேலை செய்யும் என்று தெரிவித்துள்ளேன் .அது உண்மையாகிவிட்டது. அதாவது அந்நிய சக்திகள் இன் ஊடுருவல் காங்கிரஸ் கட்சி ஆட்சி  செய்யும்போது அதிகமாக இருந்தது .மோடி வந்த பிறகு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

 அப்படி என்றால் இந்தியாவில் யாருக்காக இந்த அந்நிய சக்திகள் கை கொடுக்கும்? நமக்கே புரிகிறது அல்லவா? அதனால், இந்த தேசத்தின் பிரிவினையை எதிர்பார்க்கின்ற ஒரு அந்நிய சக்திகள் ,அதன் கைக்கூலிகளாக இந்திய கூட்டணி இருந்து வருகிறது என்பதை நாட்டு மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதில் மாற்றுக்கருத்தே இல்லை .அது மட்டும் அல்ல,

https://www.youtube.com/embed/PDPGB0TW1mc

இந்தியாவின் எதிரி நாடான சைனாவில் பா சிதம்பரம், சோனியா காந்தியின் குடும்பம் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளது. இது எல்லாம் நாட்டுடைமையாக்க முடியாமல் மத்திய அரசு திணருகிறது என்று தான் சொல்ல வேண்டும் . நாட்டில் கருப்பு பணத்தை வெள்ளையாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை நடத்திக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் மோடிக்கு எதிராக தங்களுடைய பத்திரிகை ,தொலைக்காட்சிகளில் கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருகின்றனர்.

அது எந்த அளவுக்கு அதில் உண்மை இருக்கும் ?என்பதை நாட்டு மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் . அது மட்டுமல்ல, இந்த தேசம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவது அன்னிய சக்திகளுக்கு மிகப்பெரிய ஒரு உருத்தலை உருவாக்கி இருக்கிறது. அதனால், இந்தியாவின் பொருளாதாரத்திலும், தேசத்தை பிளவுபடுத்துவதிலும், அந்நிய சக்திகள் சதி செய்யும் வேலையில் மறைமுகமாக இருந்து வருகிறது. 

இது ஒரு புறம் என்றால், கிறிஸ்தவ, முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றத்தால் இந்துக்களை மதமாற்றம் செய்து, தங்களுடைய ஆதிக்கம் செலுத்துவது முக்கிய நோக்கமாக இந்த மதமாற்ற அரசியல் இந்தியாவில் தொடர்ந்து செய்து வருகிறார்கள். 

இதற்கு ஒரே வழி இந்துக்களில் இருந்து மதம் மாறுபவர்கள், அரசின் இலவச சலுகைகள் பெற முடியாது .அரசு வேலைவாய்ப்பை பெற முடியாது. இந்த சட்டத்தை பிரதமர் மோடி உடனடியாக கொண்டு வர வேண்டும் .அது மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் இந்திய கூட்டணி அரசியல் கட்சிகள் இடம் இருந்தும், அந்நிய சக்திகளின் சதி வேலைகளில் இருந்தும் உஷாராக இருப்பது ,நாம் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் செய்கின்ற மிகப்பெரிய கடமையாகும் .

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.