Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் துணிகர கொள்ளை .
Reporter / 08 Sep 2024 / 0 Comments

தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் துணிகர கொள்ளை .

சமூகம்

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram

ஈரோடு மாவட்டம், அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த தம்பதி விஸ்வநாதன் - சின்னம்மாள். இவர்களின் மகன் கோகுல கிருஷ்ணன். மகள் ரம்யா. மகளுக்கான திருமண பத்திரிகையை குலதெய்வ கோவிலில், வைத்து தரிசனம் செய்ய, தாயுடன் கோகுல கிருஷ்ணன் நேற்று கோவிலுக்கு சென்றார். வீட்டில் விஸ்வநாதன், ரம்யா இருந்தனர்.

முகமூடி அணிந்த மூவர், 11:00 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்து, தந்தை, மகளை கத்தியை காட்டி மிரட்டி, கட்டிப் போட்டனர். பின், பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கோவிலுக்கு சென்ற கோகுலகிருஷ்ணன், தாயுடன் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்றபோது தந்தை, சகோதரி கட்டிப்போடப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருவரும் நடந்த சம்பவங்களை கூறினர்.

சென்னிமலை போலீசார் விசாரித்தனர். பீரோவில், 5 லட்சம் ரூபாய் வைத்திருந்ததாக, விஸ்வ நாதன் போலீசிடம் கூறினார். திருமண செலவுக்கு பணம் வைத்திருப்பதை தெரிந்தே சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.