தீபாவளியை கொண்டாடுவதன் ஆன்மீக ரகசியம் என்ன? இதற்குப் பின்னால், வாழ்க்கையும், சமூகமும் இணைந்திருக்கும் ரகசியம் என்ன?

தீபாவளியை கொண்டாடுவதன் ஆன்மீக ரகசியம் என்ன? இதற்குப் பின்னால், வாழ்க்கையும், சமூகமும் இணைந்திருக்கும் ரகசியம் என்ன?
தீபாவளியை கொண்டாடுவது நரகாசுரன் அழிந்தான் அவனுக்காக இந்த பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பதுதான் முன்னோர்கள் சொன்ன ஒரு கதை.
இதற்குள் இறை வழிபாடு! அந்த இறைவழிபாட்டை பட்டாசு வெடித்து, தலைக்கு நல்லெண்ணெய், தேய்த்து, குளித்து புத்தாடை அணிவது, இனிப்புகள் சாப்பிடுவது இது எல்லாம் ஒரு சம்பிரதாயத்தின் வெளிப்பாடு. ஆனால்,
இதை ஏன் கொண்டாடுகிறோம்? என்றால், மனிதனுக்குள் இருக்கும் அறியாமை, அகங்காரம் ,தீய எண்ணங்கள், பொறாமை, பேராசை, போன்ற தேவையற்ற எண்ணங்களால் ,வாழ்ந்து கொண்டிருக்கும் கோடான கோடி மக்களின் மனதிற்குள் இருக்கக்கூடிய இருள் நீங்கி,
ஞானம், அன்பு, தர்மம், நல்லொழுக்கம், ஆகிய நற்பண்புகள் மனிதனை உயர்த்தக்கூடிய நல்ல எண்ணங்களை மனதிற்குள் ஒளியாக ஏற்றுவது தான் தீப ஒளி திருநாள் கொண்டாட்டத்தின் ஆன்மீக ரகசியம்.
மேலும்,இந்த கொண்டாட்டம் என்பது வீட்டில் விளக்கேற்றுவது மட்டுமல்ல, மக்கள் ஒவ்வொருவருக்கும், சமூகத்திலும் ஒளியேற்றுவது தான், இந்த கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சம்.
அதாவது மனிதனின் பிறப்பு தனக்கு மட்டுமே அல்ல, அது பிறருக்கும் ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும். இல்லை தன்னால் முடிந்தவரை, இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒன்று செய்து வைத்துவிட்டு, செல்ல வேண்டும் என்ற ஒரு கடமை, ஒவ்வொரு பிறப்புக்கும் ,இந்த கொண்டாட்டம் வெளிப்படுத்துகிறது,
அதனால்தான் எத்தனையோ தொழிலதிபர்கள், தங்களிடம் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு, கஷ்டப்படுபவர்களுக்கு இந்த நேரத்தில் பட்டாசு இனிப்பு துணிமணிகள் கொடுத்து உதவுவார்கள்.
மேலும்,இது எல்லாம் சமூகத்தில் எல்லோரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், இந்த விழாவை சமூக நீதி திருவிழாவாக இதை கொண்டாடி மகிழ்கிறோம்.

மேலும்,இந்த மாற்றம் மக்களிடையே ஒரு அரசியல் மாற்றத்தை, ஒரு விழிப்புணர்வை உருவாக்குவது, அவசியம் ஆனது. மேலும்,
ஊழல் இல்லாத ஆட்சியில், சமுக ஏழை, எளிய மக்களின் வாழ்வில் முன்னேற்றம்.மேலும்,
இன்னும் ,மக்களில் 60%க்கு மேலும்,மக்களில் ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல் தான், இருந்து கொண்டிருக்கிறார்கள்.
தவிர,எத்தனையோ செய்தியாளர்களுக்கு கூட ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் அர்த்தம் தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
ஊழல் வேறு, லஞ்சம் வேறு, ஆனால் ,நாட்டில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள்.
ஆனால் , அரசியலில்,ஊழல் செய்த மந்திரிகள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரிதிநிதிகள் , போன்றவர்கள் ஊழல் செய்தால்,யாரோ ஒருவர் தான் தண்டிக்கப்படுகிறார்கள்.
பெரும்பாலும், இவர்கள் எல்லாம் சட்டத்தை ஏமாற்றிக் கொண்டு, சட்டத்தின் ஓட்டையில் இருந்து,தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள்.
மேலும் ,பல லட்சம் கோடி, பல ஆயிரம் கோடி ,பல 100 கோடி, ஊழல் செய்தவர்கள், சட்டத்திலிருந்து தப்பித்து விடுகிறார்கள் .

அதுவே ,நாட்டினுடைய பொருளாதாரத்தையே சீர்குலைத்தாலும், ஒருவர் கூட அவர்கள் கொள்ளை அடித்த சொத்துக்களை அரசாங்கம் திரும்பப் பெறுவதில்லை.மேலும், அவர்களுக்கு தண்டனையும் நீதிமன்றம் கொடுப்பதில்லை.
ஆனால் ,1000, 500, 5000, பத்தாயிரம் ,ஐம்பதாயிரம், ஒரு லட்சம் , என்று அதிகாரிகள் வாங்கி விட்டால், அவர்களை அசிங்கப்படுத்தி, லஞ்ச ஒழிப்புத்துறை! கொண்டு போய் நீதிமன்றத்திலே, அவர்களுக்கு தண்டனை உடனே கிடைக்கச் செய்து விடுகிறது.
இது என்?நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்க கூடிய அளவுக்கு ஊழல் செய்தாலும் ,அவர்களை சட்டமும் தண்டிப்பதில்லை. மக்களுக்கும், அதன் அர்த்தமும் புரியவில்லை.
இது மக்கள் மேல் தவறா? ஆம் ,மக்களின் தவறும் இருக்கிறது. தவிர, பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் தவறும் இருக்கிறது. இந்த உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்லாமல்,மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டு, இந்த ஊழலை நியாயப்படுத்தும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள்! செய்கின்ற மிகப்பெரிய தவறு.
இதை தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து செய்தி துறைக்கு! இந்த உண்மையை வெளிப்படுத்தி புரிய வைத்தாலும், இன்னும் புரியாமல் அதிகாரிகள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் சுயநலமா?

இதை மத்திய மாநில அரசின் செய்தி துறை அதிகாரிகள் ,வெத்து விளம்பரங்களை செய்திகளாக அங்கீகரிப்பது அவர்களின் தவறு.
அதாவது அமைச்சர் இதை திறந்து வைத்தார் .அதை பார்வையிட்டார். அவர் போட்டோவை போட்டு, விளம்பரப்படுத்துவது, இதனால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இது அவருடைய வேலை.
அந்த வேலைக்கு தான் அவர் வந்திருக்கிறார். அதற்கு தான் மக்கள் வாக்களித்து அவரை தேர்வு செய்திருக்கிறார்கள். அந்த காலத்தில் இருந்த மந்திரிகள் ,அரசியல் கட்சியினர் ,இந்த வெத்து விளம்பரத்தை விரும்பவில்லை. போலியான அரசியல் அவர்களுக்கு தெரியாது.

ஆனால், இந்த போலி அரசியலை உருவாக்கும் கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் வெத்து விளம்பரங்களை செய்திகள் என்று மக்களிடம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதை வைத்து வியாபாரம் செய்கிறது.
மேலும்,செய்தித் துறையும், இந்த வியாபாரத்திற்கு சர்குலேஷன் சட்டத்தின் மூலம் ஊக்குவித்து,துணை போய்க்கொண்டிருக்கிறது
இப்போதாவது, இப்படிப்பட்ட போலி அரசியல், நாட்டில் மறைமுகமாக, ஊழலை! எப்படி உருவாக்குகிறது? என்பதை மத்திய மாநில அரசின் செய்தி துறைக்கு புரிகிறதா?

அப்படிப்பட்ட சர்குலேஷன் சட்டம் தேவையா? செய்திக்கு முக்கியத்துவம் தராமல் ,சர்குலேஷனுக்கு முக்கியத்துவம் தருவதன் நோக்கம் என்ன? சர்குலேஷன் இரண்டாவது இடம்,உண்மை செய்திக்கும், போலி செய்திக்கும், வித்தியாசம் தெரியாமல் செய்தி துறையில் அதிகாரிகளாக பணியாற்றுவது தவறு.
மேலும்,தமிழ்நாட்டின் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் 99 சதவீதம், இந்த ஊழலை நியாயப்படுத்துகிறார்கள்.தவிர,
சிறு பத்திரிகைகளில், முதல் பக்கத்தில் வைக்கின்ற தலைப்பு கூட அதன் உண்மை எங்கே? என்று எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களே தேட வேண்டி இருக்கிறது.
அது பத்திரிக்கை துறையின் சுயநலமா? மேலும், மக்களை ஏமாற்றும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், போலியான ஊழல் எதிர்ப்புகளை, செய்திகளாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது ஊழல்வாதிகளுக்கும் இவர்கள் நல்லவர்கள், அங்கேயும் ஆதாயம் தேடிக் கொள்வார்கள். செய்தி துறைக்கும் நல்லவர்கள் ,மக்கள் வரிப்பணத்திலும் ஆதாயத்தை தேடி கொள்வார்கள்.
எந்தளவுக்கு பத்திரிக்கை துறையை ஏமாற்றலாம்? மக்கள் உண்மையை ஒரு நாள் தேடிப் பார்க்கும்போது, அவர்களுக்கு இது புரியும் அல்லவா?
மேலும்,நாட்டின் பொருளாதார சீர்குலைவு! ஏழை, எளிய நடுத்தர மக்களின் முன்னேற்றம்! இந்த ஊழலால், எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என்பதை இப்போது, இந்த உண்மை எவ்வளவு மக்களுக்கு புரிகிறதோ,
புரிந்தவர்கள், புரியாத மக்களுக்கு, எடுத்துச் சொல்லுங்கள்.மேலும், ஊழலுக்கும் ,தவறுக்கும் ஜாதிக்கும் என்ன சம்பந்தம் ?மதத்திற்கும் என்ன சம்பந்தம்?

தனி ஒருவனுடைய தவறு! எப்படி ஒரு ஜாதியின் தவறாக பேச முடியும்? தமிழ்நாட்டில்!நான் தாழ்த்தப்பட்டவன் என்று இவன் செய்த தவறுக்கு! ஜாதியை முன் நிறுத்தி அரசியலை ஏமாற்றும் கூட்டமும், எத்தனை நாளைக்கு ஜாதி பெயரை சொல்லி ஏமாற்ற முடியும்? மேலும்,
அது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை சட்டம், பி சி ஆர் சட்டம், அவர்களுக்கு! ஏமாற்ற கொடுத்த தனி அதிகாரமா? இதை அரசியல் கட்சியினர், முதல் பத்திரிக்கையில் வேலை செய்யக்கூடிய செய்தியாளர்கள் வரை பயன்படுத்த, இது ஒரு பாதுகாப்பு கேடயமாக இருக்கிறதா?
மேலும் ,நீதித்துறையின் தவறால்!நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பவர்களுக்கு நீதிபதிகளும், உடந்தையா?
ஏனென்றால், நீதித்துறை! ஊழல் செய்த மந்திரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மற்றும் எப்படி தண்டனையிலிருந்து தப்பிக்கிறார்கள்? சட்டம்! இவர்களுக்கு ஒரு தனி சட்டமா? மேலும்,
நாட்டின் பொருளாதாரத்தின் பாதிப்பு,ஏழை எளிய, நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை பாழ் படுத்துகிறது என்பதை ஊடக மைக்குகளில்! பேசுவதெல்லாம் ஏழைகளுக்கு, நடுத்தர மக்களுக்கு ,வாயிலே அல்வா கொடுப்பது போல் பேசுவார்கள்.பேசிவிட்டு ,கூட்டத்தைக் காட்டி, தொலைக்காட்சி, பத்திரிகைகளில், தங்களை உத்தமனாக காட்டிக் கொள்வார்கள். மேலும்,

இந்த உத்தமர்கள் எத்தனை கோடி ஊழல் செய்தார்கள்? என்பதை அறப்போர் இயக்கம் போல, சமூக ஆர்வலர்கள் புகார் அளித்து, நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று போராட வேண்டும். அதில், நீதிமன்றத்திற்கும், பத்திரிக்கைக்கும், அந்தக் கடமை இல்லையா?
மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் கட்சியினர், இவர்கள் சுயநலத்திற்காக, உழைப்பவன் முன்னேற்றத்தை! இந்த ஊரை ஏமாற்றும், கூட்டம் தடுக்கிறது.
இப்போது புரிகிறதா? அரசியல் என்றால் என்ன? அரசியல் கட்சி என்றால் என்ன? இவர்களுடைய சுயநல அரசியலால் நாட்டின் பொருளாதாரம் ஏழை எளிய நடுத்தர மக்களின் முன்னேற்றம் எப்படி பாதிக்கிறது? தவிர, இவர்கள் பேசுவதற்கும், செயல்படுவதற்கும், சம்பந்தம் இருக்கிறதா? மேலும்,
இவர்கள் கொள்ளையடிப்பதற்கு! இவர்கள் வீட்டுக்கு கொண்டு போவதற்கு! மக்கள் வாக்களிக்கும் ஏமாளிகள் அல்ல, என்பதை இனியாவது,விழித்துக் கொண்டு, அரசியலில் ஆயிரம் ,ஐநூறுக்கு வாக்களிக்கும் ஏமாளிகளாக ,உங்களை நீங்களே அழித்துக் கொள்வது மட்டுமல்ல,

இந்த சமூகத்தையும் நீங்கள் அழித்துக் கொண்டு இருக்கிறீர்கள். என்பது புரிகிறதா? மேலும், நமக்கென்ன எவனாவது எக்கேடு, கெட்டு போனா ?நமக்கு என்ன ? என்று சொல்லும் மக்களின் எண்ணம் தவறானது.
அப்படிப்பட்ட மக்கள்! இந்த தீப ஒளி திருநாளில் இப்படிப்பட்ட தீய எண்ணங்களை எல்லாம் அழித்து ,நமக்கும் ஒரு சமூகப் பொறுப்பு இருக்கிறது என்று வாக்களிக்கும் முன் ,அதை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

மேலும்,நல்லவர்கள் ஆட்சியில்! நாடு முன்னேறும். தீயவர்கள் ஆட்சியில்! நாடு அல்லல்படும் .மக்கள் அல்லல் படுவார்கள்.அதில், சந்தோஷம் இருக்காது.
இது எப்போது உணர்கிறார்கள்? என்றால்,அதிகாரத்தால் மக்களை கொடுமைப்படுத்தும் போது, அப்போதுதான் நாம் வாக்களித்தது தவறு என்பதை மக்கள் சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.
அதுதான் தமிழ்நாட்டில் நடந்த ஆட்சி மாற்றம். இப்போதாவது மக்கள் விழித்துக் கொள்வார்களா? - ஆசிரியர் ! மக்கள் அதிகாரம்.
பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.
தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply