Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
Reporter / 25 Oct 2024 / 0 Comments

தீபாவளி நேரம் பாஸ். கண்டுக்காதீங்க!' - லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்' கொடுத்த டாஸ்மாக் மேலாளர் .

சமூகம்

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அரசு எச்சரித்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.வழக்கம் போல நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலை வைத்து விற்று கலெக்‌ஷனை பார்த்து வருகிறார்கள். தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில், அவர்கள் கூறுவதுதான் விலை. அதனால் லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் டாஸ்மாக் கடைகளை குறி வைத்து சோதனை செய்து வருகின்றனர்.

டாஸ்மாக்:இந்த ஆண்டு அந்த பொறியில் சிக்கிவிடக் கூடாது என்று நினைத்த கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார், லஞ்ச ஒழிப்பு போலீஸாரை வித்தியாசமாக `டீல்' செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதன்படி சில நாள்களுக்கு முன்பு கடலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்தை தொடர்பு கொண்ட மேலாளர் செந்தில்குமார், ``தீபாவளி நேரம் பாஸ். டாஸ்மாக் கடைகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்ய வேண்டாம். கண்டுக்காதீங்க. ரூ.25,000 கொடுத்தனுப்பறேன்" என்று கூறியதாக கூறப்படுகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், அந்த `டீல்' குறித்து தன்னுடைய மேலதிகாரிக்குத் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடிக்க `ஸ்கெட்ச்' போட்டனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

இதற்கிடையில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், சேத்தியாத்தோப்புக்கு அருகில் இருக்கும் சென்னிநத்தம் பகுதியில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கும், மேலாளர்களுக்கும் `அறிவுரை?!' வழங்கிய செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்தை தொடர்பு கொண்டு, `சேத்தியாத்தோப்புக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்' என்று கூறியிருக்கிறார். அதற்கு சரியென்று கூறிய இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், சேத்தியாதோப்புக்குச் சென்று செந்தில்குமாருக்குப் போன் செய்து தான் வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.லஞ்சம்

அதையடுத்து தன்னுடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் ராதாகிருஷ்ணன் என்பவரிடம், ரூ.25,000 கொடுத்தனுப்பியிருக்கிறார் செந்தில்குமார். அப்போது அவர்களுக்காகவே காத்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான போலீஸார், செந்தில்குமாரையும், ராதாகிருஷ்ணனையும் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். அப்போதுகூட, `பணம் பத்தவில்லை என்றால் கூடுதலாக தருகிறோம். எங்களை விட்டுவிடுங்கள்' என்று பேரம் பேசினார்களாம்.

கடலூர் மாநகராட்சி: கட்டுமான வரைபட அனுமதி பெறுவதற்கு லஞ்சம்; மேயரின் உதவியாளர் உட்பட இருவர் கைது!

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.