தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு விஜயின் பேச்சு அரசியல் காய்ச்சல் வந்திருக்குமா ?
அக்டோபர் 27, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் 50 ஆண்டு காலமாக ஆட்சி செய்த திமுக, அதிமுக, ஜாதி கட்சிகள், பிஜேபி,காங்கிரஸ் போன்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி உள்ளார் . இது இந்த அரசியல் கட்சியினர் இடையே நேரடியே மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, இல்லையோ, மக்களிடம் விஜயின் பேச்சு அரசியல் மாற்றத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அடித்தளம் தான் விக்கிரவாண்டியின் முதல் அரசியல் மாநாடு .
இந்த முதல் அரசியல் மாநாட்டிலே, சுமார் 10 லட்சம் பேர் வந்திருக்கிறார்கள். என்றால் அது மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு அரசியல். இது தவிர, இந்த கூட்டங்கள் பிரியாணிக்கு, பாட்டிலுக்கோ, பணத்துக்கோ வந்த கூட்டமாக தெரியவில்லை .இது ஒரு அரசியல் நோக்கத்திற்காக வந்த கூட்டமாக தான் தெரிகிறது .மேலும், விஜயின் பேச்சு சுருக்கமாக இருக்கிறது .அதாவது மணிக்கணக்கில் இருக்கின்ற அரசியல் கட்சியினரை பற்றி விமர்சித்து காலத்தை கடத்துவது தேவையற்ற வேலை.

இன்றைய காலத்திற்கு, இன்றைய இளைஞர்களுக்கு என்ன தேவை? என்ன மாற்றம் அவசியம் ?அதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? இதுதான் ரத்தின சுருக்கமாக அவருடைய அரசியல் பேச்சு . மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஊழல்வாதிகளுக்கும், ஊழல் அரசியல் கட்சிகளுக்கும், விஜயின் அரசியல் பேச்சு, அரசியல் ஜுரமே வந்திருக்கும் . இதை நேரடியாகவே தாக்கி பேசி உள்ளார் .
அது மட்டுமல்ல, இன்றைய காலத்திற்கு மக்களின் பிரச்சனைகள் தீர்க்கக்கூடிய அரசியல் கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருக்கும் என்பதை சுருக்கமாக சொல்லி உள்ளார். மக்கள் எதை ஏற்பார்கள்? இவர்களுடைய பொய்களை அரசியல் என்று கேட்பார்களா? அல்லது விஜயின் அதன் எதிர்ப்பு அரசியலை ஏற்பார்களா ? காலமே இதற்கு பதில் சொல்லும் .
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply