தமிழ்நாட்டில் நீர்நிலைகளை புணரமைக்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு - முதல்வர் விஜய் .

தமிழ்நாட்டில் உள்ள ஏரி குளங்களை புணரமைப்பதற்கு, சமூக ஆர்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன் பெயரில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டதாக தகவல்.

மேலும்,இது உண்மையிலே இன்றைய காலகட்டத்திற்கு நீரின் அவசியம் மிக, மிக முக்கியமானது. ஏனென்றால், எல்.லினோ தாக்குதல் உலகம் முழுதும் சுற்றுச்சூழல் பிரச்சனையால், வெப்பமயமாதல் ஏற்பட்டு, அதிக வெயிலின் தாக்கம் உலக முழுதும் இருந்து வரும் வேலையில், ஏரிகளை தூர்வாரி மழை நீரை சேமிப்பது விவசாயத்திற்கும் ,குடிநீர் பிரச்சனைக்கும், ஏன்? மனித உயிர்கள், விலங்கினங்கள் வாழ்வதற்கு மிக,மிக அவசியமானது. மேலும்,

வருங்காலத்தில் பல நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற சூழல் நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதைக் கருத்தில் கொண்டு, நாமும் நீரின் இன்றியமையாத தேவையை அவசியம் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது.

அதை முதல்வர் விஜய் ஏரிகள் புணரமைப்பதன் மூலம் குளம், குட்டை, நீர் நிலைகள் புணரமைப்பதன் மூலம், தமிழகம் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விடுபட முடியும்.மேலும்,
இந்த ஏரிகளையும், ,குளம், குட்டைகளையும் புணர அமைக்கும் போது, பல்வேறு ஏரிகளில், ஆக்கிரமிப்புகள் உள்ளது. அது புணரமைக்கும் வேலையை தொடங்கும் முன், தமிழக அரசு சரி செய்யுமா? இல்லை, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அரசுக்கு சவால்களாக இருக்குமா?
இதற்குள் அரசியல் கட்சிகள் இதை பயன்படுத்தி அரசியல் செய்யுமா? இதை அனைத்தையும் அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது?
மேலும், இந்த வேலையை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னரே அதாவது ஓரிரு மாதத்திற்கு முன்னரே தொடங்கி இருக்க வேண்டும். இது கால தாமதமே,
இருப்பினும் எந்த அளவுக்கு விரைவு படுத்தி இப் பணிகளை முடிக்க முடியுமோ, அந்த அளவுக்கு இப் பணியினை மழைக்காலத்திற்கு முன்பே முடிக்க வேண்டும். அப்போதுதான் மழை நீரை, குளம், குட்டைகளில் சேமிக்க முடியும் என்பதை தமிழக முதல்வர் விஜய் புரிந்து கொண்டால் சரி.
பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.
தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply