Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
நீதியரசர் கற்பக விநாயகம், தமிழில் கவிதை, இலக்கியம்,ஆன்மீகம், அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு படைப்பாளி…!
Reporter / 06 Jun 2025 / 0 Comments

நீதியரசர் கற்பக விநாயகம், தமிழில் கவிதை, இலக்கியம்,ஆன்மீகம், அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு படைப்பாளி…!

இந்தியா


இந்தப் படைப்பாளியின் அழகில் வடித்த ஒரு கவிதை! அழகு தமிழில் அற்புத படைப்பானது.

அது மனித வாழ்க்கையில் அழகிற்கு அர்த்தம் சொல்லும் கவிதை…! இது அழகின் கவிதையா? அல்லது கவிதையின் அழகா? எது என்பது நம் உணர்வில் அது அழகு வடிவில் கலக்கும் போது இந்த கவிதையின் அழகு எப்படி?என்பதை படித்து அதன் அழகு சுவையை பருகுவோமா?

ஆடும் பொழுது மயில் அழகு
ஓடும் பொழுது மான் அழகு
தாவும் பொழுது முயல் அழகு
கூவும் பொழுது சேவல் அழகு
பாயும் பொழுது புலி அழகு
மேயும் பொழுது
பசு அழகு

விடியும் பொழுது விண்ணழகு
மடியும் பொழுது அருவி அழகு
நடக்கும் பொழுது கால் அழகு
கடக்கும் பொழுது நதி அழகு
கொதிக்கும் பொழுது பால் அழகு

துதிக்கும்பொழுது பாடல் அழகு
வடிக்கும் பொழுது சோறு அழகு
குடிக்கும் பொழுது கூழ் அழகு
படிக்கும் பொழுது கம்பன் அழகு
வெடிக்கும் பொழுது பஞ்சு அழகு

வெட்டும் பொழுது வைரம் அழகு
கொட்டும் பொழுது முரசு அழகு
அணியும் பொழுது நகை அழகு
தணியும் பொழுது கோபம் அழகு
அரைக்கும் பொழுது சந்தனம் அழகு

உரைக்கும் பொழுது தங்கம் அழகு
நானும் பொழுது பெண்மை அழகு
நான் ஏற்றுகிற பொழுது வில் அழகு
நீராடும் பொழுது ஈரம் அழகு
போராடும் பொழுது வீரம் அழகு

காணும் பொழுது தாய்மை அழகு
பேணும் பொழுது ஒழுக்கம் அழகு
சிரிக்கும் பொழுது குழந்தை அழகு
தரிக்கும்பொழுது கர்ப்பம் அழகு
மெல்லும்பொழுது தாம்பூலம் அழகு

சொல்லும் பொழுது தமிழ் அழகு
உங்களுக்கு நான் அழகு
எனக்கு நீங்கள் அழகு
கம்பனுக்கு தமிழ் அழகு
தமிழுக்கு கம்பன் அழகு

- நீதியரசர் எம்.கற்பக விநாயகம்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.