நாமக்கல்லில் ஷோ ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் .

புதிய பேருந்து நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூங்கா சாலையில் ஷோ் ஆட்டோக்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமத்தி சாலை, சேலம் சாலை, மோகனூா் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பயணிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து செல்வா். இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்ததால், பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளின் வருகை குறைந்தது. இதனால் ஷோ்-ஆட்டோ ஓட்டுநா்கள் வருவாயின்றி தவித்தனா்.
புதிய பேருந்து நிலையத்திற்கு சென்ற போது அங்குள்ள சவாரி ஆட்டோ ஓட்டுநா்கள், மாநகராட்சி நிா்வாகம்தங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளதால் ஷோ்-ஆட்டோக்கள் இங்கு வரக்கூடாது என எதிா்ப்புத் தெரிவித்தனா்.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. புதிய பேருந்து நிலையத்தில் இடம் அளித்து பயணிகளை அழைத்து செல்ல மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக ஷோ்-ஆட்டோக்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை நாமக்கல் நகர ஷோ்-ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினா். அங்குசெல்லும் நகர பேருந்துகளில் வழக்கத்தைக் காட்டிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply