Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
Reporter / 28 Aug 2024 / 0 Comments

நிருபரை ஜீப்பில் ஏற்றியதால் 2 போலீசார் இடமாற்றம்

இந்தியா

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram

வீரபாண்டி: நிருபரை ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற விவகாரத்தில், 2 போலீசார், ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டனர்.சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ், 25. சென்னையில், தனியார், 'டிவி'யில் நிருபராக பணிபுரிகிறார். சொந்த ஊர் வந்த அவர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, ஆட்டையாம்பட்டி - காகாபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ராமன், போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர், சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதை, யுவராஜ் மொபைல் போனில் படம் பிடித்தார்.

இதுகுறித்து போலீசார் கேட்டபோது, நிருபர் என தெரிவித்துள்ளார். ஆனால்,அவர் மீது சந்தேகமாக இருந்ததால் போலீசார், யுவராஜை ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். இத்தகவல் சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கவனத்துக்கு சென்றது. இதையடுத்து விசாரித்த அவர், இரு போலீசாரையும் உடனே ஆயுதப்படைக்கு இடமாற்றி உத்தரவிட்டார்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.