நிர்வாக காரணங்களுக்காக கிராம சபை கூட்டம் நவம்பர் 23 க்கு தள்ளிவைப்பு - ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா .

கிராமசபை கூட்டம் நவம்பர் 1ல், நடைபெற இருந்தது. அது நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 23 ல் , தள்ளி வைக்கப்பட்டது .இந்த கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 23ஆம் தேதி காலை 11:00 மணி முதல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,இந்த உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பொன்னையா அறிவித்துள்ளார். மேலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பொதுமக்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply