Breaking News
நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தமிழக அரசு தீபம் ஏற்றுமா? நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமா? - முருக பக்தர்கள் .
23 Nov 2026 / 0 Comments

நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தமிழக அரசு தீபம் ஏற்றுமா? நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமா? - முருக பக்தர்கள் .

தமிழ்நாடு

நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் தமிழக அரசு ஏற்றுமா? உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமா? என்று ஆவலுடன் எதிர்பார்த்தும் முருக பக்தர்களுக்கு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில், மறுசீராய்வு மனு போட்டது.

மேலும்,அந்த மனு மீது, உடனடியாக இன்றே அதற்கு தடை வாங்கி விட வேண்டும் என்று எதிர்பார்த்தது. எதிர்பார்த்தது போல், உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுசீராய்வு மனுவை எடுக்கவில்லை.

 இதனால், தமிழக அரசு நாளை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் ,இங்கே, சிறுபான்மை மக்களுக்கான அரசியல் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் நீதிமன்றத்தின் உத்தரவை நடை முறைப் படுத்த வேண்டும் .

அப்படி படுத்தவில்லை என்றால், மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்திலே நீதிபதிகள் தள்ளுபடியும் செய்து விடுவார்கள்.

 ஏனென்றால், நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மறுசீராய்வு மனுவுக்கு என்ன அவசியம்? என்பதுதான் அவர்களின் கேள்வியாக இருக்கும்.

மேலும் ,நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல், அதற்கு ஒரு காரணத்தை அல்லது அரசியல் செய்தால் நீதித்துறை நிச்சயம் இவர்களுக்கு எதிராக தான் செயல்படும்.

மேலும் ,நீதித்துறையின் தீர்ப்பையே மதிக்காமல் மறுசீராய்வு மனு எப்படி அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்?

இது தவிர,நாளை உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால், தமிழக அரசு இதை நிறைவேற்றி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

1001580628.jpg

 அதற்காக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதில், என்ன முடிவெடுக்க போகிறார்கள்? என்பது தான் தமிழக முருக பக்தர்கள், ஆவலுடன் எதிர்பார்க்கும் பதில்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer)

பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.

தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.