Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 13 Jun 2025 / 0 Comments

பாஜக கட்சி கட்டுப்பாட்டை மீறி அண்ணாமலை கூட்டணி பற்றி பேசலாமா? - மாநிலத் தலைவர் நாகேந்திரன்.

இந்தியா

அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அமித்ஷா நீக்கி விட்ட பிறகு, கூட்டணி குறித்து பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. மேலும்,ஒரு கட்சியின் கூட்டணி பற்றி பேசுவதற்கு தேசிய அளவில் அதிகாரம் உள்ளவர்கள் தான் பேசுவார்கள்.அவர்களுடன் இணைந்து மாநில நிர்வாகிகள் பேசுவார்கள்.

ஆனால்,அண்ணாமலை அதிமுக, பாஜக கூட்டணியை உடைக்கும் விதமாகவே தொடர்ந்து பேசி வருகிறார். இது பற்றி அதிமுகவிலும்,பாஜகவிலும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரனும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், அமித்ஷா மதுரை வந்தபோது கூட தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்என்ற தகவல். அதையும் மீறி அண்ணாமலை செயல்படுவதால் அவரை கட்சியிலிருந்து நீக்க நாயினார் நாகேந்திரன் முயற்சி எடுத்துள்ளார்.

மேலும்,கட்சியின் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் எந்த கட்சியினராக இருந்தாலும், ஆனால் அண்ணாமலை அவ்வாறு செயல்படுவது எந்த கட்சியும் ஏற்றுக் கொள்ளாது. ஒருவேளை அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறார் என்கிறார்கள். இது தவிர, அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது பாஜக கட்சிக்கு என்று கொள்கை இருக்கிறது.அதை எல்லாம் குப்பையிலே தூக்கிப் போட்டு விட்டு செயல்பட்டது மூத்த பாஜக நிர்வாகிகளுக்கு பிடிக்காத ஒன்று.

மேலும்,பாஜக கட்சிக்கு என்று சில பாதைகள் உள்ளது. அந்தப் பாதை எல்லாம் அழித்துவிட்டு, திமுகவுக்கு ஈக்குவலாக போட்டி போட்டார். திமுக எப்படியும் பேசக் கூடியது.அது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும்.பத்திரிக்கையாளர்களுக்கு தெரியும். பாஜக அப்படி பேச முடியாது. இதைத் தொடர்ந்து அண்ணாமலை அரசியல் செய்து திமுகவுக்குள் ரகசியமாக இணைந்து விட்டாரா?என்ற சந்தேகம் தான்,இப்போது அரசியல் வட்டாரத்தில் பேசுகின்ற பேச்சு.

அண்ணாமலையின் அரசியல் ஒரு நடிப்பு அரசியல், நடிப்பு நீண்ட காலம் அரசியலில் பயணித்ததாக நான் பார்க்கவில்லை. அந்த நடிப்பை நானே நேரில் பார்த்தவன். அதனால் அண்ணாமலையின் அரசியலை நம்பி அமித்ஷா வந்த போது துணியை சுத்துகின்ற கூட்டம் புரிந்து கொள்ளுமா?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.