பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய திமுக - முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய் பெரியாரை வைத்து அரசியலில் திமுக ஊழல் செய்தார்கள், இது மறுக்க முடியாத ஒரு உண்மை.
மேலும் ,பெரியாரின் பெயரையும், அவருடைய கொள்கையில், வாழ்வது போல காட்டிக் கொண்டு, பேசிக் கொண்டிருப்பார்கள்.

இதைதான் போலி அரசியல் என்று மக்கள் அதிகாரத்தில் ,அடிக்கடி சொல்லி வருகிறோம். இந்தப் போலி அரசியல்வாதிகள் யாரெல்லாம் ஒழுக்கமாக வாழ்ந்தார்களோ, யாரெல்லாம் அவர்களில் வரலாற்றில் இடம் பிடித்தார்களோ,
அவர்களின் பெயரை அரசியலில் பயன்படுத்தி, இந்த போலிகள் அரசியல் செய்வது ,தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் வேலை.
அது மட்டுமல்ல, மற்றொரு பக்கம் அம்பேத்கர் பெயரை பயன்படுத்தி ஜாதி அரசியல் செய்ய அம்பேத்கர் எழுதியோ, அல்லது சொல்லிவிட்டோ போனாரா?

மேலும்,அவர் கொண்டு வந்த பி.சி.ஆர். சட்டமும் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டமும் அரசியலுக்கு பயன்படுத்துங்கள் என்று சொல்லிவிட்டு போனாரா?
மேலும் ,எந்த நோக்கத்திற்காக அவர் சட்டம் கொண்டு வந்தாரோ அந்த சட்டம் அந்த காலத்திற்கு தேவையானது. ஆனால் இன்று அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் செய்வதை அம்பேத்கரே ஏற்றுக் கொள்ள மாட்டார்.
மேலும்,அவர் அடித்தட்டு மக்களுக்காக போராடியதால் ,அவர் பெயரை முன்னிறுத்தி எப்படி கொள்ளை அடிக்கலாம் ?எப்படி அடுத்த சமுதாயத்தை மிரட்டலாம் ?அதுக்கு என்ன வழி இருக்கிறது?
இதையெல்லாம் தமிழ்நாட்டு ஊடகங்கள் அவர்களை அம்பேத்கரின் சொந்தக்காரர்களாக ஆக்கி, பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் மக்களை ஏமாற்ற இந்த போலி அரசியல் செய்து வந்தவர்களை முன்னிலைப்படுத்தியது மிகப்பெரிய தவறு. மேலும்,
அம்பேத்கர் வாழ்ந்ததில் எத்தனை பேர் அவருடைய கொள்கையை தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்து இருக்கிறார்கள் ?
அவ்வாறு இருப்பவர்கள்.எத்தனை பேர் என பட்டியல் இனத்தில், பட்டியல் போட முடியுமா? இப்படிதான், திமுகவில் பெரியாரை வைத்து, அரசியல் செய்து பேசுவது, நடிப்பது மட்டுமே பெரியார் இயக்க வாதிகளாக ஆகிவிட முடியுமா?
தவிர, பெரியாரைப் பற்றி தொலைக்காட்சிகளில் பேசுபவன் எல்லாம் பெரியாரிஸ்ட் என்று சொன்னால், அரசியல் தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இப்படிதான் போலி அரசியல்வாதிகள்,தன்னை எல்லாம் அரசியல்வாதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் என்பது போராட்டத்தின் வாழ்க்கையாக வாழ வேண்டியவர்கள், இன்று சொகுசு வாழ்க்கைக்கும், சொத்துக்களை சேர்க்கவும், பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், அன்று தங்களுடைய வாழ்க்கை சுகத்தை அர்ப்பணித்து மக்களுக்காக வாழ்ந்தவர்களுக்கும் அவர்களின் பெயரை சொல்லி வாழ்பவர்களுக்கும் போலிக்கும், உண்மைக்கும் அர்த்தம் தெரியாமல் மக்கள் வாழ்வதுதான் இன்றைய அரசியல் ஏமாற்றத்தின் சமூக போராட்டம்.
மேலும் இந்த போலிகள், அரசியலுக்கு தகுதியற்றவர்களாக, இருந்தும், அதற்கு தன்னை, தகுதியானவன் என்று பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒவ்வொரு துறையும் போலிகள் ஆக்கிரமித்துள்ளதன் விளைவு, அரசியலில் ஊழல்கள், அதிகரித்து, வன்முறைகள், ரவுடிகள் அதிகரித்தார்கள். மேலும், பொதுநலம் தெரியாதவர்கள், எல்லாம் தங்களுடைய சுயநல ஆதாயத்திற்காக அரசியலுக்கு வந்துள்ளார்கள்.
இதன் விளைவு அரசியலில் இன்று, மக்களுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்வதற்கு பதிலாக, மக்களை கொள்ளை அடிப்பதற்கும், மிரட்டுவதற்கும் ,அடியாள் வேலை பார்ப்பதற்கும், இதற்கெல்லாம் அரசியல் கட்சிகளின் கிரிமினல்கள், அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,அரசியலுக்கு எதற்கு வந்தோம்? எதற்காக அரசியல்? என்று தெரியாதவன் எல்லாம், தன் பாக்கெட்டில் ஸ்டாலின் போட்டோ, எடப்பாடி பழனிசாமி போட்டோ ,ஜெயலலிதா போட்டோ ,இன்றைய முதல்வர் விஜய் போட்டோவும் வைத்துக் கொண்டிருப்பார்கள்.
மேலும் ,மக்கள் எந்த அளவுக்கு நீங்கள் இவர்களின் அரசியலை புரிந்து கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களை நீங்களே, இவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.
இவர்கள் உங்களைக் காப்பாற்ற வேண்டாம், உங்களை இவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அது தான் இன்றைய அரசியல்!
மேலும்,முதல்வர் விஜய் வெளிப்படையாக உண்மையை தன்னுடைய எக்ஸ் தளத்தில் திமுகவைப் பற்றி ஒரு உண்மையை மக்களிடம் சொல்லி இருக்கிறார்.
அதாவது ,திமுக பெரியாரை வைத்து ஊழல் செய்தது, இனி எந்த காலத்திலும் ,மக்கள் திமுகவை தலை நிமிர விடமாட்டார்கள்.
மேலும் இந்த நூலகத்திற்கு திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட, குழுவில் இடம் பெற்றுள்ள பெருமாள் முருகனே இந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் என்று முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.
தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply