Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
மக்கள் ஒரு பக்கம் கோயில்! இன்னொரு பக்கம் ஜீவசமாதிகள் வழிபாடு!
Reporter / 30 Jan 2025 / 0 Comments

மக்கள் ஒரு பக்கம் கோயில்! இன்னொரு பக்கம் ஜீவசமாதிகள் வழிபாடு!

இந்தியா

ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram

மக்கள் இன்று கோயில் கோயில் ஆக சென்று வழிபட ஆரம்பித்து விட்டார்கள். இது எதற்கு என்றால் ,எங்கு போனால்? நம்முடைய குறை தீரும்? என்று வேதனையுடன் வாழ்கின்ற மக்கள் கோயில்களையும், சாமியார்களையும், ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும், சித்தர்களையும் நம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். 

இங்கே மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வுக்கான ஜோதிடர்களிடம் போனால், அவர்கள் இந்த கோயிலுக்கு போங்கள், இந்த பரிகாரம் செய்யுங்கள். இந்த யாக பூஜைகள் செய்யுங்கள், இப்படி பலவற்றை சொல்லி விடுகிறார்கள். மக்களும் நம்பிக்கையில்,  வயிற்று வலி, கடன் பிரச்சனை, நோய், கல்யாணம் ஆகாத பிரச்சனை, வீடு கட்டும் பிரச்சனை இடம் வாங்கும் பிரச்சனை, இப்படி ஏதோ ஒரு பாதிப்புக்கு கோயிலையும், ஜோதிடர்களையும், சித்தர்களையும், ஜீவசமாதிகளையும் குறி சொல்பவர்களையும் நம்பி ஒரு பக்கம் போலி சாமியார்களையும், போலி ஜோதிடர்களையும் நம்பி ,அவர்கள் சொல்வதெல்லாம் செய்யும்போது, ஒரு பக்கம் பணம் விரயம், இன்னொரு பக்கம் விரக்தி அடைந்து சோர்வடைந்து போவார்கள். 

இவர்கள் ஜாதகத்தை பார்த்து பல பொய்களை சொன்னால், அவனும் அந்த நம்பிக்கையில் வரும், வரும் என்று எதிர்பார்த்து லட்சக்கணக்கானபேர் ஏமாற்றம் அடைகிறார்கள். அதுவும் அவர்கள் சும்மா ஏமாறவில்லை, ஆயிரம், இரண்டாயிரம், கொடுத்து தான் ஏமாறுகிறார்கள். நூற்றுக்கு அரை சதவீதம் நடக்கும் ,நடந்தால் அதுக்கு ஒரு விதமான பேச்சு ,நடக்கவில்லை என்றால் அதற்கு ஒரு விதமான பேச்சு, எல்லாம் பேச்சிலே சரி கட்டி விடுவார்கள். இப்படிதான் ஜோதிடர்களின் நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. 

எப்போது ஜோதிடத்தை வியாபாரம் ஆக்கி, பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்களோ, அங்கே ஜோதிடம் பலிக்காது. ஜோதிடம் என்பது தெய்வீக கலை, பணத்திற்காக வியாபாரம் செய்ய ஜோதிடக்கலை மகான்கள், ரிஷிகள்  இதை படைக்கவில்லை. படைக்கப்பட்டது எதற்காக?  இந்த ஜோதிடத்தில் மக்கள் அறிந்து, இவர்களுடைய பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு தான், அவர்கள் உருவாக்கினார்கள். ஆனால், இவர்கள் பணத்திற்காக ஒவ்வொன்றையும் வியாபாரம் ஆக்கிவிட்டார்கள். 

தெய்வீகம், தெய்வம் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் தான் இறைவன். அவனுக்கு ஆக்கவும் தெரியும், அழிக்கவும் தெரியும். அதனால், நாட்டில் மக்கள் போலிகளை நம்பி ஏமாறாதீர்கள். போலிகள் அரசியல், ஆன்மீகம், பத்திரிக்கை, சமூகம், எல்லாவற்றிலும் கலந்து இருக்கிறார்கள். அதனால், உண்மையை ஆய்வு செய்து யார் சொன்னது, சொன்னபடி நடக்கிறது? என்பதை தெரிந்து இந்த ஜோதிடர்களை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை இன்னும் ஏமாற்றமாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.