மத மோதலை, உருவாக்கும் லிங்கமலை! அதில் அரசியல் செய்தால் ஆளும் கட்சிக்கு இது அவப்பெயரை ஏற்படுத்துமா?

லிங்கமலை மிகப் பழமையான இந்து கோயிலின் மலை. இதன் மீது சிலுவையை எப்போது நட்டார்கள்?

அதற்கான ஆதாரத்தை அதிகாரிகள் கேட்கவில்லை. இந்துக்கள் இது பற்றி கேள்வி கேட்கும் போது அல்லது போராடும் போது அதற்கு அதிகாரிகள் கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பது இது மத மோதலை உருவாக்குகின்ற வேலை.
மேலும்,அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும்? இந்த பிரச்சனை முதல்வர் ஜோசப் விஜயின் கவனத்திற்கு, இதுவரை செல்லாமல் இருந்திருக்காது.
ஏனென்றால், இங்கே மத மோதல் என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியது.
இதில் காவல்துறை நடுநிலையுடன் உண்மை எது? என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையிடம் உள்ளது.

ஆனால், ஒரு பக்கம் நின்று கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவர்களை விட்டுவிட்டு, போராட வந்தவர்களை தூக்கி உள்ளே வைப்பது, இது ஆட்சிக்கு அவ பெயரை ஏற்படுத்தக் கூடிய வேலை.
அதுமட்டுமல்ல, முதல்வர் விஜய்! அவர் கிறிஸ்தவர் என்பதால், இப் பிரச்சனை, கிறிஸ்தவர்களின் அராஜக வேலைகளுக்கு, இந்த ஆட்சி அதிகாரத்தால் அவர்களுக்கு மறைமுகமாக உதவுகிறதா? சந்தேகம் இந்துக்களுக்கு எழுந்துள்ளது.

ஏனென்றால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து வரும் ஒரு இந்துக்களின் மலை மற்றும் கோயிலை சிலுவை வைத்து ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நோக்கம் என்ன? அப்படி என்றால் இது இந்துக்களுக்கு எதிரான ஆட்சியா?
மேலும்,இதை வைத்து அரசியல் கட்சிகள் நிச்சயம் அரசியல் செய்வதற்கும் வாய்ப்புள்ளது. தவிர, பழமையான சிவன் கோவிலையும், அதன் வரலாற்றுச் சின்னங்களையும், பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
ஆனால், இந்துக்களுக்கும், இந்து கோயில்களுக்கும், பாதுகாப்பை கொடுக்க வேண்டிய அரசு, அவர்களுக்கு எதிராக செயல்படுகிறதா? என்பது பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகம்.

மேலும் , இந்த லிங்கமலை யாருக்குச் சொந்தம்? வழிபாட்டு உரிமையைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?
இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கம் ,காவல்துறை! நியாயத்தின் பக்கம் நிற்காமல், போராட வந்தவர்களை கைது செய்வது ஆட்சிக்கு அவ பெயரை ஏற்படுத்தும். என்பதில் மாற்று கருத்து இல்லை.
மேலும், ஒரு சில இந்து அமைப்புகள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் இந்த அநீதிக்கு எதிராக போராடுகிறார்கள். தமிழக வெற்றிக் கழக அரசு கிருத்துவ அரசாக மாறிவிட்டால், நிச்சயம் பெரும்பான்மை இந்துக்களின் எதிர்ப்பை பெற்றாக வேண்டும்.
மேலும்,ஓட்டுக்களுக்காக அரசியல் கட்சிகள் ,மத விஷயத்தில் அரசியல் செய்தால், இனி அதன் பின் விளைவு, மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தி,ஆட்சிக்கு பின்னடைவு.
மேலும்,கோயில் சொத்துக்களின் ஆக்கிரமிப்புகளை, அகற்றாமல், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இது மோதலை ஏற்படுத்தும் பிரச்சனையாக தமிழகத்தில் உருவெடுக்க போகிறதா?மேலும்,
பாரம்பரியமிக்க கோயில்களில் ,வேற்று மத அடையாளங்களை கொண்டு வந்து புகுத்துவது, இந்துக்கள் ஒருபோதும் அதை ஏற்க மாட்டார்கள் ,

இங்கே சிறுபான்மை என்ற பெயரில், இந்து கோயில்களின் சொத்துக்களை ஆக்கிரமிப்பது ,அதற்கு அரசியல் கட்சிகள், ஆட்சி அதிகாரம், துணை போவது, இந்துக்களுக்கு எதிரான வேலையா?
மேலும்,தொடர்ந்து இந்துக்கள் ஒற்றுமை இல்லை என்பதை புரிந்து ஓட்டு அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தவிர,இந்த மக்கள் தொடர்ந்து ஏமாந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது. இதை முதல்வர் விஜய் புரிந்து நடவடிக்கை எடுப்பாரா?
பின்னூட்டப் பகுதியில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடும் நபர்களே முழுப் பொறுப்பாவார்கள். அக்கருத்துகள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகளாகவோ அல்லது நிலைப்பாடுகளாகவோ கருதப்படக் கூடாது.
தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக அவதூறு, அவமதிப்பு அல்லது ஆபாசமான வகையில் கருத்துகளைப் பதிவிடுவது இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply