Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
Reporter / 17 Sep 2024 / 0 Comments

மயானத்தை காணவில்லை! சேலம் கலெக்டரிடம் புகார் மனு .

சமூகம்

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை சேர்ந்த செஞ்சிறகுகள் என்ற தொண்டு அமைப்பின் தலைவர் தினேஷ், 30, என்பவர், 'சுடுகாட்டை காணவில்லை' எனும் பேனரை இரு கைகளால் பிடித்தபடி, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி, பேனரை பறிமுதல் செய்து, அவரை கலெக்டரிடம் புகார் அளிக்க அனுப்பினர்.

பின், அவர் கூறியதாவது: தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட, 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, அங்குள்ள மயானத்தில் கொட்டப்படுகிறது. மயானத்தின் ஒரு பகுதியில், குப்பையை மறுசுழற்சி செய்யும் கூடம் அமைக்கப்படும் என கூறி, ஒன்பது மாதங்களாக கொட்டப்படும் குப்பை, மலை போல குவிந்துள்ளதால் மயானம் மறைந்து விட்டது.


மயானத்தை சுற்றியுள்ள, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், குப்பை துர்நாற்றத்தால் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அத்துடன் கொசு உற்பத்தி அதிகமாகி, நோய் தொற்று பாதிப்புடன், புழு, பூச்சி தொல்லைகளாலும் அவதிப்படுகின்றனர். மழை காலங்களில் பாதிப்பு அதிகமாகி விடுகிறது.
இதுபற்றி ஊர்மக்கள் சார்பில், பலமுறை மனு கொடுத்தும் நகராட்சி தரப்பில் நடவடிக்கை இல்லை. இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்யவும், சடலத்தை அடக்கம் செய்யவும் முடியாத அவலம் உள்ளது. எனவே, மயானத்தை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.