Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 09 Nov 2024 / 0 Comments

வகுப்பறையில் மயங்கி விழுந்த +1 மாணவி… சிகிச்சையின்போது குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி..!

சமூகம்


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலி வந்ததாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர் .

சிறிது நேரத்தில் மாணவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது மாணவியின் சித்தி மகன் ரங்கராஜன் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமின் கர்ப்பமானது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

மாணவியின் கர்ப்பத்துக்குக் காரணமான சாணார்புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (எ) ரங்கராஜ் (28) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சாணார்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (எ) ரங்கராஜ் (28). கூலித்தொழிலாளியான இவரது பெரியம்மாவின் மகளான 16 வயது மாணவி கடந்த ஆண்டு ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் மாணவி சித்தி அங்காயி வீட்டில் படித்து வந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கராஜ் மாணவியிடம் தகாத உறவில் ஈடுபட்டார். பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி கர்ப்பமானார்.

இதையறிந்த அவர் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்க முயன்றார். ஆனால் மாத்திரை கிடைக்கவில்லை. இந்நிலையில், 10ம் வகுப்பு முடித்த மாணவி, சில மாதங்களுக்கு முன் சொந்த ஊரான பள்ளிபாளையம் வந்துள்ளார். பின்னர் அங்குள்ள பெண்கள் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார்.இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மாணவி நேற்று முன்தினம் வகுப்பறையில் பிரசவ வலியால் மயங்கி விழுந்தார். சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது, ​​மாணவிக்கு அங்கேயே பெண் குழந்தை பிறந்தது. விசாரணைக்கு பின் தங்கராஜை கைது செய்துள்ளோம் என்றனர்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.