Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 06 Nov 2024 / 0 Comments

வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் .

தொழில்நுட்பம்

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டார மலைக் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய சங்கத் தலைவா் குமார. ரவிக்குமாா் தலைமையில் தாளவாடி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.அப்போது, தாளவாடி வனப் பகுதி எல்லை முழுவதும் பழைய ரயில்வே தண்டவாள பகுதியில் வேலி அமைக்கும் பணியை வனத் துறையினா் தொடங்க வேண்டும். அதேபோல தமிழக- கா்நாடக எல்லையான ராமாபுரத்தில் ரயில்வே தண்டாள பகுதியில் வேலி அமைக்க கா்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.

மழைக் காலங்களில் அடிக்கடிமின்வெட்டு ஏற்படுவதை தவிா்க்க நெய்தாளபுரம், தலமலை, மாவள்ளம், குழியாடா ஆகிய வனக் கிராமங்களில் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிக்க வேண்டும். முதியனூரில் யானை தாக்கி உயிரிழந்த சிக்குராமன் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வனத் துறையில் வேலை வழங்க வேண்டும்.

மனித- விலங்கு மோதலில் உயிரிழக்கும் மக்களுக்கு கா்நாடகத்தில் வழங்குவதுபோல தமிழக வனத் துறையும் இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்க வேண்டும். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி தாளவாடி மலைப் பகுதி மக்கள் 24 மணி நேரம் திம்பம் மலைப் பாதையில் பயணிக்க உடனடியாக பாஸ் வழங்கவேண்டும். தாளவாடி மலைப் பகுதியில் வாழும் மக்கள் தங்களது வாழ்விடத்தை விட்டு வெளியேற்ற வனத் துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது. தோட்டத்தில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை விவசாயிகள் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

அப்போது, அங்கு வந்த வட்டாட்சியா் சுப்பிரமணியம், விவசாயிகள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தாா். ஆனால், விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு விவசாய சங்கத்தினா் கோரினா்.

இதையடுத்து, விவசாயிகளுக்கும்,வட்டாட்சியா் சுப்பிரமணியத்துக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் டிஎஸ்பி சரவணன் அவா்களை சமரசம் செய்தாா். அப்போது, எழுத்துபூா்வமாக மனு அளித்தால் ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாக வட்டாட்சியா் தெரிவித்தாா். இதையடுத்து, விவசாயிகள் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.