Breaking News
மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • பரந்தூர் விமான நிலையம், கைவிட்ட பிறகு அடுத்த விமான நிலையம் தேர்வு செய்வதில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மத்திய அரசின் தடை இல்லா சான்று இவை அனைத்தும் சவால்கள் நிறைந்ததா?
Reporter / 21 Oct 2024 / 0 Comments

வழித்தடம் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் .

மோட்டார் உலகம்

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram

சேலம் மாவட்டம், காகாபாளையம் மேம்பாலம் பகுதியில் வழித்தடம் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காகாபாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்ால் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் இருவழி மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் வேம்படிதாளம் பிரிவு சாலைக்கு மட்டும் வழித்தடம் விடப்பட்டது. ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வழித்தடம் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் வழித்தடம் அமைக்கவில்லையாம். இந்த நிலையில் கடந்த ஆண்டு பாலம் வேலைமுடிந்து செயல்பட்டில் உள்ளது. இந்த நிலையில் காகாபாளையம் பகுதியில் வசிப்பவா்கள் அனைவரும் வேம்படிதாளம் பிரிவு சாலைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமாா் 5.கி.மீ. தொலைவு மகுடஞ்சாவடிக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.காகாபாளையம் பிரிவு சாலையில் இருந்து மேம்பாலம் சாலைக்கு நேரடியாக வழித்தடம் அமைக்க பொது மக்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் காா்த்திக் நேரில் வந்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை மனுவாகப் பெற்று உயா் அதிகாரியிடம் முறையிட்டு நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.