Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 09 Nov 2024 / 0 Comments

ஈரோட்டில் வளா்ச்சி திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தல் .

சமூகம்

நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram

வளா்ச்சித் திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.என்.வெங்கடேஷ் அறிவுறுத்தினாா்.

புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகா், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரான பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா் டி.என்.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். 

புன்செய்புளியம்பட்டி நகராட்சி, ராமநாதபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா், நேரு நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளின் வாசிப்பு மற்றும்கற்றல் திறன் குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவா்களுடன் கலந்துரையாடினாா். 

தொடா்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.05 கி.மீ நீளத்துக்கு ரூ.32.02 லட்சம் மதிப்பீட்டில் அரியப்பம்பாளையம்- தபோவனம் செல்லும் சாலை மேம்பாட்டு பணி, பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், விண்ணப்பள்ளி ஊராட்சி, பாரதி நகா் பகுதியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.11.12 கோடி செலவில் 36 வீடுகள் கட்டும் பணி, புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.52.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீா்த் திட்ட மேம்பாட்டுப் பணிகள், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், நஞ்சப்பகவுண்டன்புதூா் காலனி,கோணமூலை பகுதியில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.55,000, மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வீடு சீரமைக்கும் பணி, அதே பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் கட்டுமானப் பணி, சத்தியமங்கலம் பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் 40 கடைகள் மற்றும் 130 திறந்தவெளி கடைகளுடன் வாரச்சந்தை மேம்படுத்தும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டு, பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். 

தொடா்ந்து பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் சாா்பில் இயங்கும் சத்தியமங்கலம் அரசு மாணவா்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டுமாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகள், சுகாதாரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தாா்.

அதனைத் தொடா்ந்து நம்பியூா் ஊராட்சி ஒன்றியத்தில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.2.07 கோடி மதிப்பீட்டில் அளுக்குளி- காரப்பாடி சாலை, புதிய பாலம் கட்டும் பணி, கரட்டுப்பாளையம் பகுதியில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் ஜிம்னாஸ்டிக் மைதானம் கட்டுமானப் பணி, கோபியில் செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம், ஈரோடு சுண்ணாம்பு ஓடை தூா்வாரும் பணியையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். 

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரெ.சதீஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.சுப்பா ராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.