Breaking News
 நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர். • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 17 Aug 2024 / 0 Comments

காங்கிரஸ் குடும்பத்தினர் அந்நிய சக்திகள் உடன் இந்தியாவுக்கு எதிரான கள்ள உறவா ?

இந்தியா

ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram

ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் போலி வேஷம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது இந்த வீடியோவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்களுக்காக பிஜேபி யின் ஐடி விங் கூட இதை கொடுத்திருக்கலாம். இந்த செய்தி சமூகத் தளத்தில் வந்த செய்தி தான். இருப்பினும், இதில் உண்மை உள்ளது. இவர்களுடைய பேச்சு அந்நிய சக்திகளுக்கு ஆதரவான செய்திகளை தான் வெளியிட்டு வருகிறார்கள் .இதை பலமுறை பார்த்திருக்கிறேன். மேலும்,

https://www.youtube.com/embed/q3-Da7vBYsE

நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் 100% சான்றிதழ் கொடுக்க முடியாது. ஆனால், காங்கிரசை விட ,பிஜேபி பெட்டர் தான் என்ற நற்சான்று தர முடியும். அது கூட தமிழ்நாட்டில் தர முடியாது. மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத், ராஜ்நாத் சிங் போன்ற முக்கிய தலைவர்கள், இந்த நாட்டிற்கும் ,நாட்டு மக்களுக்கும், முடிந்தவரை நல்லது செய்யவே முயற்சித்து வருகிறார்கள். அதில் செய்தும் வருகிறார்கள்.

 ஆனால், ராகுல் காந்தி அரசியல் அடிப்படை தெரியாத ஒரு நபர். இவருக்கு இங்கு இருக்கும் ஜாதி கட்சி எல்லாம் சுற்றி வந்த ஜாதி முன்னிலைப்படுத்திக்கொண்டு பேசிக் கொண்டிருக்கும், செல்வப் பெருந்தகைக்கும்,  ராகுல் காந்திக்கும் அரசியல் தெரியாத அடி முட்டாள்களும், அடியாட்களும் வைத்துக் கொண்டு அரசியல் பேசிக் கொண்டிருந்தால், அது சரியாக வரும் .அரசியல் தெரிந்தவர்களிடம் பேச முடியாது‌. ராகுல் காந்தியை பின்னாடி உட்கார வைத்தால், இந்தியாவுக்கு என்ன நஷ்டம்? மேலும் தமிழ்நாட்டுக்கு என்ன நஷ்டம் ?அல்லது நாட்டு மக்களுக்கு என்ன நஷ்டம்? எதுவுமே இல்லை. நிற்க வைத்தால் கூட ஒன்றுமில்லை.

 ஏனென்றால், செல்வப் பெருந்தகையும், ராகுல் காந்தியும் இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ சேவை செய்தவர்கள் அல்ல, அவர்கள் சேவையை பாராட்டி முன்னாள் எப்படி உட்கார வைக்க முடியும்? என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர். இதையெல்லாம் எந்த மக்களும் கவனிக்க மாட்டார்கள் என்று இதையும் ஒரு சிலர் பத்திரிக்கையில் செய்தியாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்களின் நிலைமை என்ன? என்று கேட்பதற்கு எந்த அரசியல் கட்சியும் தமிழ்நாட்டிலே இல்லை .

ஆனால், எல்லா அரசியல் கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு, அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .இதனால் யாருக்கு என்ன பயன்? அரசியலில் மக்களை ஏமாற்றி கொள்ளையடிப்பதும், ஊழல் செய்வதும் அரசியல் என்றால் இந்த மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும் ? ஆயிரம், ஐநூறுக்கு வாக்களிப்பதும் , தேர்தல் இலவசங்கள் மூலம் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதும் தேர்தல் ஆகிவிட்டது.

 இது ஒருபுறம் என்றால்,மற்றொருபுறம், இந்த தேர்தலில் அந்நிய நாட்டின் அரசியல் தலையீடு இருக்கும் என்று மக்கள் அதிகாரத்தில் முன்னரே எழுதியிருந்தேன். அது நிருபணம் ஆகியுள்ளது. மேலும், ராகுல் காந்தியின் குடும்பத்தினர் சைனாவில் சுமார் 2000 கோடிக்கு மேல் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி வருகிறது. மேலும், இது போன்ற அந்நிய சக்திகள் இந்தியாவுக்கு எதிராக சதி வேலை செய்யும்போது, அதை சுட்டிக்காட்டினால் அதற்கு சப்போர்ட் செய்கிறார்கள் .அப்படி என்றால் இவர்கள் இருவருக்கும் கள்ள உறவா? 

நாடும், நாட்டு மக்களும், வருங்கால இளைய தலைமுறைகளும்,பல லட்சம் மாணவ மாணவிகள் படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கும்போது,அதற்கான தீர்வு எந்த ஒரு அரசியல் கட்சியினரும் பேசுவதில்லை .சுயநல அரசியலில் எத்தனை கோடி லாபம் பார்க்கலாம் ?இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறத்தில் இவர்கள் பதவி வெறிக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையை எழுத பத்திரிகைகள் இல்லை. போலியான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் முதலிடம் வகிக்கிறது . உண்மை தெரியாத மக்கள், இதுதான் பத்திரிக்கை, இதற்கு மேல் பத்திரிகை இல்லை. இதற்கு மேல் செய்தி இல்லை என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் .

 மேலும், மக்களுக்கு உண்மை தெரிந்தால் கேள்வி கேட்பார்கள்? அவர்களுக்கு தெரியாத வரை நமக்கு அது சந்தோஷம்தான் இந்த நிலையில் அரசியல் மற்றும் ஆட்சியாளர்கள். இதிலிருந்து மக்கள் அரசியலை தெளிவாக உண்மை எது? என்பதை சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது. அதனால், இன்றைய அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் தியாகிகள் போல் பேசிவிட்டு போவது தான், இவர்களுடைய அரசியல் ஆகிவிட்டது .அது இலவசமாக கொடுக்கக்கூடிய பேச்சுக்கள். இவர் ஒன்று கொடுத்தால், இன்னொருத்தர் இன்னொரு கட்சியிலிருந்து அதற்கு பதில் கொடுப்பார்.

 இதையெல்லாம் பார்த்து படித்து ,வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர், டீக்கடைகளில் இந்த வெத்து  பேச்சுகளை பேசிக் கொண்டிருப்பார்கள் .இதனால் யாருக்கு என்ன பயன்? இதுவாவது அந்த காலத்தில் பேசினார்கள். இப்போது அதை கூட பேச மாட்டார்கள். இப்போது பேசுவதற்கு கூட கூலி கேட்பார்கள். அதனால், அரசியல் என்பது அரசியல் கட்சிகளின் ஏமாற்று வேலையாக இருக்கிறது. அது ஓட்டுக்கான அரசியல் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 

ஓட்டுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் ஆயிரம் ,ஐநூறுக்கு விலை போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த விலை போனவர்களால், தன்னை கட்சியில் பெரிய ஆள் என்று சொல்லிக்கொண்டு, ஓட்டுமொத்த கிராமத்தினரையும், நகரத்தினரையும், அடிமையாக்கி கொண்டு ,அரசியல் செய்து கொள்ளை அடிக்கலாம் அல்லது பதவிக்கு வந்து ஊழல் செய்து, கோடி கணக்கில் சம்பாதிக்கலாம் .இதுதான் இன்றைய அரசியல்.இதிலிருந்து மக்கள் வெளிவர வேண்டும். 

மக்களுக்கு உண்மை புரிய வைப்பதில் தான், மக்கள் அதிகாரத்தின் முக்கிய நோக்கம். அதனால், நீங்கள் ஏமாந்தால் ,உங்களுடைய வருங்கால இளைய தலைமுறைகள், வாழ்க்கை ஏமாந்து போகும் என்பதை புரிந்து கொண்டால் சரி .

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.