Breaking News
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கைக்கு நிருபர்கள் தேவை ! •  நாட்டில் இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இதற்கெல்லாம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? வெளிநாட்டில் இருந்து வரும் நிதிக்கு! பணம் கொடுப்பவரின் நோக்கம் என்ன? - மத்திய அரசின் உளவுத்துறைகள் ஒவ்வொன்றும் இதை ஆய்வு செய்யுமா ? - சமூக ஆர்வலர்கள். • மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள் • தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? • மக்கள் அதிகாரம் புதிய வடிவமைப்புகள் கொண்ட இணையதளத்தை இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இதை வாசகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளோம் - ஆசிரியர்.
Reporter / 13 Oct 2025 / 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில்! பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் .

தொழில்நுட்பம்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகிறது.மேலும்,

இந்த கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் !நாங்கள் பூர்விகமாக பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு, விட்டு நீங்கள் கொடுக்கின்ற பணத்தை வாங்கி ,எங்கே போய் ?நாங்கள் பிழைப்போம்? அது எங்களுக்கு சந்தோஷம் கொடுக்குமா?

நீங்கள் கொடுக்கின்ற லட்சமும், கோடியும், அதை வைத்துக்கொண்டு நாங்களும் ,எங்கள் சந்ததியும் சந்தோஷமாக வாழ முடியுமா? இதுதான், இந்த மக்களின் தொடர்ந்து போராட்டத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இதைப் பற்றி மத்திய அரசும், மாநில அரசும், காதில் வாங்காமல் அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது என்று, தொடர்ந்து மாவட்ட நிர்வாக அலுவலர்களை வைத்து ,சிலருடைய சொத்துக்களை வாங்கி இருப்பதாக தகவல். ஆனால், ஏகனாபரம் கிராமத்தில் மட்டும், அது நடக்கவில்லை.

அவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக தற்போது கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். மேலும், அதிகாரிகள் தங்களுடைய சொத்துக்களை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய கருத்துக்களை நம்பி அப்பகுதி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் ,கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.மேலும்,

இந்த மக்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்குமா? தவிர,இப் பிரச்சனையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்தித்து, வாக்குறுதி கொடுத்துள்ளார். இப் பிரச்சனைக்காக, உங்களோடு சேர்ந்து நான் போராடுவேன் என்று தெரிவித்துள்ளார் .

இப் பிரச்சனையில் அவரும் தலையிடுவார் என்பது அப் பகுதி மக்களின் நம்பிக்கை.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.