மழையின் காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகமானதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை .

கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 2,220 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் செல்வதால் கிருஷ்ணகிரி, விழுப்புரம் , தர்மபுரி,கடலூர், திருவண்ணாமலை, போன்ற 5 மாவட்டங்களில் ஆறுகளை ஒட்டி உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆற்றில் இறங்கி கடக்கவோ, குளிக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply