Breaking News
E-book MAKKAL ADHIKARAM E - BOOK OCT 2026 Published E-book Makkal Adhikaram - June 2026 Published ஆறு மாத கால விஜய் ஆட்சி! எப்படி இருக்கு? மக்கள் கருத்து. • கூட்டுறவு துறையின் ஊழலை நேர்மையான அதிகாரிகளால் ஒழிக்க முடியுமா? - அது மிகப்பெரிய சவால்கள் . • தேசம் மற்றும் சமூகத்தின் நலனுக்காகப் போராடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு, தமிழ்நாட்டில் பேரணிகள் நடத்துவதற்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது? மக்களிடையே தவறான புரிதல்கள் பரப்பப்படுகின்றன. • Why is a ban imposed on holding rallies in Tamil Nadu for the RSS organization that fights for the welfare of the nation and society? Misconceptions being spread among the people. • வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வங்கக் கடலில் உருவாகும் புயல் - இந்திய வானிலை எச்சரிக்கை .
Super Admin / 27 Oct 2026 / 0 Comments

ஆறு மாத கால விஜய் ஆட்சி! எப்படி இருக்கு? மக்கள் கருத்து.

தமிழ்நாடு

1001497901.jpg

 தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி பொறுப்பேற்று, சுமார் ஆறு மாத காலம் ஆகும் நிலையில் ,அரசியல் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும், இன்று விலைவாசி உயர்வு பற்றி தான் ஏழை, நடுத்தர மக்கள், அதிகம் பேசுகிறார்கள்.

1001497890.jpg

மேலும்,மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது.

தவிர, பால் முதல் மளிகைப் பொருட்கள் அனைத்தும் உயர்ந்துள்ளது. என மக்கள் அதிக புலம்பல்.

1001497888.png

 மேலும் ,இலவசமாக பஸ் பயணத்தை பெண்களுக்கு கொடுத்துவிட்டு, ஏற்கனவே, போக்குவரத்து துறை! அதிக நஷ்டத்தில் இயங்கி வரும் போது, இன்னும் போக்குவரத்து துறை அதிக நஷ்டத்தில் தான் இது கொண்டு போய் சேர்க்கும்.

அதுமட்டுமல்ல, இதன் முடிவு, போக்குவரத்து துறை! அதிக நஷ்டத்தில் இயக்க முடியாமல், அரசு தனியார் மையம் ஆக்கினால், அதைவிட கேவலம் விஜய் அரசுக்கு வேறு எதுவும் இல்லை.மேலும், 

1001497948.jpg

மக்கள் தலையில், அதிக மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது மக்கள் புலம்பி வருகிறார்கள். இப்போது அதிக விலைக்கு கூடுதலாக மின்சாரம் தேவைக்காக வாங்கினாலும் அது மக்கள் தலையில் தானே சுமத்த போகிறார்கள்?

1001497843.png

 மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களை எடுக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் இருந்த மோசமான அளவுக்கு இல்லையென்றாலும், மாணவிகளின் பாதுகாப்பு இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. பல மாணவிகள் பள்ளிகளில் காணாமல் போனது, இன்னும் காவல்துறை அது பற்றி புலனாய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்காமல்  இருப்பது, அரசுக்கு மக்களிடம் அவ பெயராகத் தான் உள்ளது.

1001497884.png

மேலும், பள்ளிகளில் மாணவ ,மாணவிகள் செல்போன் உபயோகத்தை நிறுத்த வேண்டும். அது ஒரு பக்கம் காதலிக்க உபயோகிக்கும் கருவியாக மாணவ, மாணவிகள் இருபாலரும் எஸ் .எம். எஸ், மற்றும் தொடர்பு கொண்டு, பேசிக்கொள்வது இன்ஸ்டா வில் காதலிப்பது, இதையெல்லாம் நியாயப் படுத்தினாலும், அவர்களுடைய எதிர்காலம், இன்னொரு பக்கம் அவர்களுடைய படிப்பு தடைபடுகிறது.

 இதில் பெற்றோரும், கல்வித்துறை நிர்வாகமும், கவனிக்க வேண்டிய இது ஒரு முக்கிய விஷயம்.

 மேலும்,கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஈடுபட்ட தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த முஸ்லிம்கள் 22 பேரை 60 நாட்கள் பரோலில் விட்டிருப்பது, இந்து அமைப்புகளும், பாஜகவும் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும்,இது கடந்த திமுக ஆட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் கூட்டணியில் இருந்தால் கூட, அவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை.

 தற்போதைய தவெக அரசு அவர்களுக்கு பரோல் கொடுத்திருப்பது, பொதுமக்கள் அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

 மேலும், இலவசங்களை கொடுத்து, மக்களை திருப்திப்படுத்தி ஆட்சி செய்ய வேண்டும் என்றால், அது முடியாத காரியம். எவ்வளவு கொடுத்தாலும், எதை கொடுத்தாலும், மக்களுக்கு போதாது என்பதுதான் இருக்குமே தவிர, போதும் என்பது இருக்கப் போவதில்ல.

1001469597.jpg

மேலும்,இலவசத்தை தேர்தல் வாக்குறுதியாக அதிக அளவில் கொடுத்து விட்டு ,தற்போது அதற்கு செலவிட நிதி பற்றாக்குறை என்று அதிக கடன்களை வாங்குவது, தமிழக அரசின் நிர்வாகம் , தமிழகத்தை அதிக கடன் பட்டியலில் கொண்டு போய் சேர்க்கக்கூடாது. 

1001497979.jpg

 மேலும்,மக்களுக்கு எதை செய்ய வேண்டும் என்பதை செய்தாலே போதுமானது. அதில் முக்கியமாக ஊழலை குறைத்து, விலைவாசியை குறைத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சீர் செய்து, தரமான கல்வியை கொடுத்து, வேலை வாய்ப்புகளை கொடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினாலே! தமிழக வெற்றி கழகத்தின் சிறந்த ஆட்சியாக மக்களால் பேசப்படும்.

அதை விட்டுவிட்டு, இலவசத்தை கொடுத்து, அதிக கடன் சுமைகளை உயர்த்தி, நல்ல நிர்வாகத்தை ஜோசப் விஜய்யால் கொடுக்க முடியாது என்பது பொதுமக்கள் கருத்து.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.