Breaking News
E-book MAKKAL ADHIKARAM E - BOOK OCT 2026 Published E-book Makkal Adhikaram - June 2026 Published ஆறு மாத கால விஜய் ஆட்சி! எப்படி இருக்கு? மக்கள் கருத்து. • கூட்டுறவு துறையின் ஊழலை நேர்மையான அதிகாரிகளால் ஒழிக்க முடியுமா? - அது மிகப்பெரிய சவால்கள் . • தேசம் மற்றும் சமூகத்தின் நலனுக்காகப் போராடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு, தமிழ்நாட்டில் பேரணிகள் நடத்துவதற்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது? மக்களிடையே தவறான புரிதல்கள் பரப்பப்படுகின்றன. • Why is a ban imposed on holding rallies in Tamil Nadu for the RSS organization that fights for the welfare of the nation and society? Misconceptions being spread among the people. • வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வங்கக் கடலில் உருவாகும் புயல் - இந்திய வானிலை எச்சரிக்கை .
Super Admin / 26 Oct 2026 / 0 Comments

கூட்டுறவு துறையின் ஊழலை நேர்மையான அதிகாரிகளால் ஒழிக்க முடியுமா? - அது மிகப்பெரிய சவால்கள் .

தமிழ்நாடு

WhatsApp Image 2026-10-26 at 20.47.57.jpeg

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா ஐஏஎஸ்! நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிராக ஊழியர் சங்கம் போராட்டம் மதுரையில் நடத்தியுள்ளது. இந்தப் போராட்டம் எதற்கு? ஊழியர்கள் செய்த தவறின் காரணமாக கூட்டுறவு பதிவாளர் லதா அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார். 

அது வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொள்முதலில், ஏற்பட்ட நஷ்டம் கோடிக்கணக்கில் இருப்பதால்,இது குறித்து அவர் நடவடிக்கை எடுத்தார். ஆனால், அவரை சஸ்பெண்ட் செய்தது தவறு ,அவரை மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும். ஊழியருக்கு எதிரான நடவடிக்கையில் பதிவாளர் லதா இருந்து வருகிறார் என்று அவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

1001497320.jpg

மேலும்,கூட்டுறவுத் துறையே ஒரு ஊழல் துறை! இங்கே ஊழல் அதிகாரிகளுக்கும், ஊழல் நிர்வாகிகளுக்கும் ஒத்து போகும், ஆனால், நேர்மையான அதிகாரிகள் வந்தால், அவர்கள் பேரிலே இவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைப்பார்கள். அப்படிதான் கூட்டுறவு துறையின் சங்க பதிவாளர் லதா மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.இது பற்றிய கூட்டுறவுத் துறையில் உள்ள நேர்மையான சில அதிகாரிகளை விசாரிக்கும் போது, எனக்கு எந்த தகவல் கிடைத்தது. மேலும், 

நாட்டில் எத்தனையோ துறைகள் இருக்கிறது ஆனால், கூட்டுறவுத்துறை போன்ற ஒரு ஊழல் துறை பார்க்கவே முடியாது. கூட்டுறவு துறையின் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால், ஓட்டு மொத்த சங்கங்களின் நிர்வாகிகளை, ஏதாவது ஒரு அமௌன்ட் (amount) கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் தான் கூட்டு துறையின் ஊழலை ஒழிக்க முடியும்.

அப்படி அனுப்பிய பிறகு, தகுதியான படித்த இளைஞர்களை தேர்வு செய்து, அதில் பணிய அமர்த்த வேண்டும். இது தவிர,குறைந்தபட்சம் டிகிரி முடித்தவர்களுக்கு தான் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இங்கே ஏழாவது ,எட்டாவது படித்துவிட்டு, கூட்டுறவு கடையில் வேலை செய்தவர்கள் எல்லாம் சங்க செயலாளராகவும் ,சங்க செயலாளராக இருந்தவர்கள் எல்லாம் வங்கியில் மேலாளராகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் ஒழிக்காமல் கூட்டுறவுத் துறையில் ஊழலை ஒழிக்க முடியாது.மேலும்,  

கூட்டுறவு துறையின் எம்.டி., ஆடிட்டர், இப்படி இவர்களுடைய கல்வி தகுதியை எடுத்து ஆய்வு செய்யுங்கள். ஏன் கூட்டுறவு துறையில் ஊழல் நடக்காது? அதனால் , கூட்டுறவு துறையில் சங்க பதிவாளர் லதா , நேர்மையான முறையில் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

 இப்போது அவருக்கு எதிராக பல ஊழல் சங்கங்கள் போராட ஆரம்பித்து இருப்பதாக தகவல்.

அதனால், தமிழக அரசு இவர்களுடைய ஒவ்வொரு புகார்களை ஆய்வு செய்து பாருங்கள். அப்போது இந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு சங்க நிர்வாகிகள் பின்னணி என்ன அது பற்றிய ஆய்வு செய்தால் தமிழக அரசின் உயர்நிலை அதிகாரிகளுக்கு பல தகவல்கள் தெரிய வரும்.

மேலும், 2024 டிசம்பர் மாதம் வெளியான தகவல்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களில், 2020–21 மற்றும் 2021–22 ஆகிய நிதியாண்டுகளில் தமிழகத்தின் 231 கூட்டுறவுச் சங்கங்களில் மொத்தம் ₹22.80 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாகக் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது. 

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அரசாங்கம் இந்த ஊழலுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்பதுதான் கூட்டுறவுவாளர்களின் கேள்வி?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.