காலி மது பாட்டல்களை திரும்ப பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் தமிழக அரசு 160 பேர் சஸ்பெண்ட்.

காலி மது பாட்டல்களை திரும்ப பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் தமிழக அரசு 160 பேர் சஸ்பெண்ட். இதில் இரு தரப்பிலும், உள்ள நிர்வாக செயல்பாடு முரண்பாடுகளுக்கு உட்பட்டது.மேலும்,
தமிழக அரசு இதில் ஊழியர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல், அவர்களை சஸ்பெண்ட் செய்தது தவறு.
மேலும்,தமிழகத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்ட போது அதற்கான கட்டமைப்பை உருவாக்காமல் செய்தது தமிழக அரசின் தவறு.
மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும், தமிழக அரசுக்கும், ஏற்பட்டுள்ள முரண்பட்ட முக்கிய பிரச்சனைகள் என்ன?

இதில் டாஸ்மாக்ஜ் ஊழியர்கள் முன்வைக்கும் முக்கியப் பிரச்சினைகள் ?
காலி மதுபாட்டில்களைப் பெறுவதற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
பாட்டில்களைச் சேகரித்து பாதுகாக்க போதிய இடவசதி இல்லை.
மதுபாட்டில்களை ஸ்கேன் செய்வதால் ,கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது.ழ
மேலும், வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 திருப்பிக் கொடுக்கும் நடைமுறையில் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளன.

இந்தப் பணியைத் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை. இது உண்மையிலே நியாயமான கோரிக்கை தான்.மேலும், அரசு தரப்பில் தெரிவிப்பது என்ன?
காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான திட்டம்.
மேலும்,அரசு உத்தரவுப்படி கடைகளைத் திறக்காமல் இருப்பது ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டது.
தவிர,நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்.

காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பே அரசு உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியதாமலும், அவர்களுடைய கருத்துக்களை கேட்காமலும், அவர்களுடைய போராட்டத்தை செவி கொடுத்து கேட்காமல் சஸ்பெண்ட் செய்தது தவறு.
அரசு ஊழியர் ஆனாலும், பொதுமக்கள் ஆனாலும், அல்லது வேறு துறை சார்ந்தவராக இருந்தாலும் தங்களுடைய கோரிக்கைக்காக போராடுவது, அவர்களுடைய ஜனநாயக உரிமை.மேலும்,
கூடுதல் பணியாளர்களை நியமிக்காமல் ஏற்கெனவே, பணிபுரியும் ஊழியர்களிடம் கூடுதல் பொறுப்புகளை ஒப்படைப்பது நியாயமில்லை.
மேலும்,ஊழியர்களின் கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்காமல், சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தது தவறு.மேலும்,
காலி பாட்டில்களைச் சேகரிக்கும் பணியைத் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளதா?
இந்தத் திட்டத்தின் நிர்வாகச் செலவுகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்குச் செலுத்தப்படும் தொகை குறித்த விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுமா? எனவே, சஸ்பெண்ட் செய்த அரசு ஊழியர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த உத்தரவிட வேண்டும்.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply