ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram
அகத்தியர் பெருமானின் அருள்வாக்கு இது.
ஒருவனிடம் தர்ம சிந்தனை இருக்கும் பொழுது அவனை அந்த தர்மமே அவனுடைய எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும் .ஏனென்றால்! ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும், எத்தனை மந்திரங்கள் உருவேற்றினாலும், எத்தனை அபிஷேகங்கள், யாகங்கள் செய்தாலும் கூட ,அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால், இறை அருளை பெற முடியாது .
ஒரு மனிதன் இறையருளை பெற வேண்டும் என்றால், அவனிடம் ஏன் இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தர்ம குணமும், பிறருக்கு உதவும் குணமும் இருந்துவிட்டால் போதும் ,அவன் இறையை தேட வேண்டியது இல்லை. இறை இவனைத் தேடி வந்துவிடும். எவன் அதிக அளவு தர்மம் செய்கிறானோ அவனிடம் இறையே வந்து கையேந்தும்.