அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram
உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் மதுபானங்களின் உற்பத்தி விநியோகம் கொள்முதல் விற்பனை ஆகியவற்றில் சட்டமேற்றும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக விசாரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் சப்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று பெரும்பான்மை அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட பல மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மனுசாட்கள் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி சந்திர சூட் ,நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், அபய் எஸ் ஓகா, ஜே பி பார்வதி வாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மிசிஹ், டிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினர் .
இதில் தலைமை நீதிபதி சந்திர சூட் உட்பட எட்டு நீதிபதிகள் மது உற்பத்தி தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது.இதில் புதிய சட்டங்களை இயற்ற நாடாளுமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பு வழங்கினர். ஆனால் நீதிபதி நாகரத்னா மட்டும் இந்த தீர்ப்பில் இருந்து விலகி தொழிற்சாலை மது அல்லது டீனேச்சர்ட் ஸ்பிரிட் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த சட்டம் இயற்றும் தகுதியை மாநிலங்களுக்கு கொண்டிருக்கவில்லை .எனவே, மத்திய அரசுக்கு தான் இந்த அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார் .
மேலும், உச்சநீதிமன்றம் எதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு இதில் அதிகாரம் இல்லை என்பதை தெரிவித்துள்ளது? தெரியவில்லை. ஆனால், 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று தீர்ப்பு வழங்கினார்கள்.
ஆனால், அந்தத் தீர்ப்புக்கு மாறாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் இன்று மதுவால் சீரழிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு போன்ற பல மாநில அரசுகள் இந்த வருமானத்தைக் கொண்டுதான் ஆட்சி நிர்வாகத்தை செய்கிறோம் என்று தெரிவிக்கிறார்கள். இது கேவலமான ஒன்று. மேலும், நாட்டில் இதனால் வருங்கால இளைய தலைமுறைகள் வாழ்க்கை பாதிக்கிறது. பல குடும்பங்கள் சண்டை சச்சரவுகளால் பிரிந்து செல்கிறது. கூலிக்குச் செல்லும் குடும்பங்கள் பல வறுமை ஒரு பக்கம் அவர்களை வாட்டுகிறது.
மொத்தத்தில் இந்த மதுவால் மக்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். இதை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு இருந்தால், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மது ஒழிப்பை ஏற்படுத்தலாம் . இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவமானது. தவிர, ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தை விட .மனித வாழ்க்கையின் ஒழுக்கம் மேன்மையானது . இதை புரியாமல் இன்று உச்ச நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கி உள்ளது எனது சமூக ஆர்வலர்கள், இந்த தேசத்தின் பற்றாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் .