இந்துக்களை ஏமாற்றுவதற்கு தான் இந்து சமய அறநிலைத்துறையா ? கோயில்களின் சிலைகள் கடத்தப்பட்டபோதெல்லாம், இந்து சமய அறநிலைத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram

நாட்டில் தனி மனிதர்களின் கோயில்கள், மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டு பரம்பரையாக பூஜை, வழிபாடு செய்து வரும் குடும்பங்கள் உண்டு. அதேபோல், தனியார் அறக்கட்டளை பெயரில் உள்ள கோயில்கள், எத்தனையோ இன்று இந்து சமய அறநிலைத்துறை கைப்பற்றியுள்ளது. தவிர, கிராமத்தினர் சொந்த செலவில் கட்டப்பட்ட கோயில்கள் கூட, வருமானம் அதிகமாக வரக்கூடிய கோயில்கள் எல்லாம் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் கைப்பற்றியுள்ளது.

இது தவிர, அந்த காலத்தில் மன்னர்கள் கோயிலுக்கு எழுதி வைத்த நிலங்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள், இவையெல்லாம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தவுடன் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் அதை எப்படி எல்லாம் செலவு கணக்கு எழுதி, பங்கு போட்டு சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பது இந்துக்களுக்கே தெரியாத ஒன்று.;

சமீபத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பொன்மாணிக்கவேல் செய்தியாளர்கள் மத்தியில் ஆண்டுக்கு 500 கோடி பெரிய கோயில்களில் வரிவிதித்து, அந்த வரியை கொண்டு போய் அரசாங்க நிதியில் சேர்த்துக் கொள்கிறார்கள் .இது எவ்வளவு பெரிய மோசடி வேலை? இது போல், கிறிஸ்தவ சர்ச்சுகளிலோ அல்லது முஸ்லிம்களின் தர்காக்களிலோ, இந்த மோசடி வேலை அரசியல் கட்சியினரோ அல்லது ஆட்சியாளர்களோ செய்ய முடியுமா? மேலும்,

இந்த கோயில்களின் சிலைகள் கடத்தப்பட்டது .அப்போதெல்லாம் இந்து சமய அறநிலைத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? கோயில் பூசாரிகளே, சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் பல சிலை திருட்டுக்களை கண்டுபிடித்து, இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார். இதில் சில  காவல்துறையினருக்கும் பங்கு இருந்துள்ளது .நாட்டில் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் நிச்சயம் அவர்களுக்கு போராட்டம் இருக்கும். ஏனென்றால், காவல் துறை, பத்திரிக்கை துறை போன்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதனால்தான் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் நேர்மையாக செயல்பட்டதன் காரணமாக, பல சிலை திருட்டுவெளிவந்தது. இல்லையென்றால், வெளிவர வாய்ப்பு இல்லை. குற்றம் செய்கிறவர்களும், தன்னை நிரபராதி போல் காட்டிக் கொள்வார்கள் .அந்த வகையில் காதர் பாஷா டிஎஸ்பி இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு வந்துள்ளது. சிபிஐ விசாரணையில் நிச்சயம் குற்றவாளிகள் தப்ப முடியாது .மேலும்,

இந்துக்களின் ஓட்டுகளை வாங்கிக் கொண்டு, இந்து மக்களுக்கு எதிராக இப்படிப்பட்ட சட்டங்களை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட சட்டங்கள் இன்று வரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். பல உண்மைகள் மறைக்கப்பட்டு இருக்கிறது. சுதந்திரதிற்கு முன் , சுதந்திரத்திற்கு பின், மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள், சட்டங்கள் தெரியாது .அப்படி மறைக்கப்பட்ட உண்மைகள் தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இன்று இந்துக்களுக்கு எதிரான இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

அதாவது, சிறுபான்மை மக்கள் மத ரீதியாக பள்ளிகளை ஆரம்பித்து கொள்ளலாம். ஆனால், பெரும்பான்மை மக்களான இந்துக்கள் மத ரீதியான பள்ளிகளை ஆரம்பிக்கக் கூடாது. என்னடா சட்டம்? சிறுபான்மைக்கு ஒரு சட்டம்? பெரும்பான்மைக்கு ஒரு சட்டம்? தலித்துக்கு ஒரு சட்டம்? இவனுக்கு ஒரு சட்டம்? அவனுக்கு ஒரு சட்டம்? 

நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு சட்டத்தை கொண்டு வந்து, நாட்டு மக்களை முட்டாள் ஆக்கி இருக்கிறார்கள். மதரீதியாக பிளவு படுத்தி இருக்கிறார்கள். ஆனால், இன்று பிஜேபி மத ரீதியாக பிளவுபடுத்துகிறது என்று இந்த ஊடகங்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அன்றைய சட்டத்தை எடுத்துப் பாருங்கள்? யார் மத ரீதியாக பிளவு படுத்தி இருக்கிறார்கள் ? 

இந்த பிளவுக்கு முக்கிய காரணமாக இருந்தது பிராமணர்கள். அவர்கள் இந்துக்களை தீண்டத்தகாத ஜாதிகளாக தான் அன்று பார்த்தார்கள். அதனுடைய விளைவு என்று அந்த சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த தீண்டாமையை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தது தான் திராவிட கழகம், பெரியார் ,அம்பேத்கர் இதை தான் அவர்கள் பெரிது படுத்தினார்களே ஒழிய, இந்துக்களுக்கான  கோயிலுக்கு இந்த சட்டங்களைப் பற்றி எல்லாம் மக்களிடம் கொண்டு செல்லவில்லை.அப்போது கோயிலே பிராமணர்கள் கையில் இருந்தது. கோயிலுக்குள்ளே அவர்கள் மட்டும்தான் செல்வார்கள். அப்படி இருக்கும்போது, இதைப்பற்றி எல்லாம் இவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையா?

பிராமணர்கள் ஆதிக்கம் ஒழிந்த பிறகு, மற்ற சமூகங்கள் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருகிறது. அப்போதுதான் வருமானம் கோயிலுக்கு அதிகரிக்கிறது. கோயிலுக்கான வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க அதை அரசாங்கம் கைப்பற்றுகிறது.மேலும், கைப்பற்றினாலும், கோயிலுக்கான செலவு அல்லது இந்து சமூகத்திற்கு தேவையான கல்வி, சமூக மேம்பாட்டு செயல்பாடுகள், எதுவுமே இல்லை. எல்லாம் பொது நிதியில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். 

அதே போல் முஸ்லிம்களின் இந்து அறநிலையத்துறை ஆரம்பிங்கள். கிருத்துவர்களின் இந்து அறநிலையத்துறை ஆரம்பியுங்கள். அங்கு வரக்கூடிய கோடிக்கணக்கான நிதியை பொது நிதியில் ஆட்சியாளர்கள் சேருங்கள் பார்க்கலாம்? தொடர்ந்து இந்துக்களின் நிதி கோயில்களில் பொய் கணக்குகள் மற்றும் அரசாங்க நிதிக்கு மாற்றப்படுகிறது. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் என்ன சுதந்திரம்? என்ன சட்டங்கள் இருக்கிறதோ அதைவிட குறைவாகத்தான் இந்துக்களுக்கு இருக்கிறது.

 ஆனால், பணத்தை இந்துக்கள் கோயில்கள் மூலம் அரசாங்கத்தின் பொது நிதிக்கு தர வேண்டும். இவர்கள் தர மாட்டார்கள் என்ன சட்டம்? இதையெல்லாம் உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் கவனத்தில் கொண்டு இந்த சட்டத்தை மறுபரிசிலனை செய்ய வேண்டும் என்பதுதான் ஒட்டு மொத்த இந்துக்களின் கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *