ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram
தாய்ப்பால் கொடுத்த கையோடு பச்சிளம் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற தாய் யார் ?மேலும், அக்குழந்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே சாலையோர கடையில் குழந்தையை வீசி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவிர
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனை அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையோர கடைகளில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் குழந்தையின் சத்தத்தை கேட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து காவல்துறை குழந்தைகள் காப்பகம் மையத்திற்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை சோதனை செய்வதில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைதான் எனவும் அந்த குழந்தையின் கையில் அவரது தாய் பெயர் மதினா என்றும் டேக் பொருத்தப்பட்டது தெரியவந்தது.மேலும்,
அக் குழந்தையை காவல்துறையினரும், குழந்தைகள் காப்பக மைய ஊழியர்கள் குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் கடத்தல் கும்பல் வீசி சென்றதா? அல்லது பெற்ற தாயே குழந்தையை சாலையோரத்தில் வீசினாரா? என விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் .தவிர,
நேற்று முன்தினம் சேலத்திலும் இதுபோல சம்பவம் அரங்கேரி பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது கள்ளக்குறிச்சிலும் இந்த சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. குறிப்பாக இந்த சம்பவத்தை பற்றி காவல்துறையினரிடம் கேட்டபோது மழுப்பலான பல்வேறு கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். குழந்தையின் தாய் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், அவர் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியில் வந்து தாய்ப்பால் குடித்துவிட்டு குழந்தையை அங்கே வைத்து சென்றதாகவும் அவர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.மேலும்,
அப்படியே அவர்கள் சொல்வது உண்மை என்றாலும் கூட, மனநல பாதிக்கப்பட்ட தாயின் உறவினர்கள் யாரும் அவரின் அருகில் இல்லையா? அவர்கள் கவனித்து இருக்க மாட்டார்களா? இல்லையென்றால் வேறு யாராவது குழந்தையை கடத்திச் சென்று சாலையோரம் வீசி சென்றார்களா? டேக் பொருந்திய பச்சிளம் குழந்தை வெளியே எப்படி வந்தது? அரசு மருத்துவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அலட்சியப் போக்காக செயல்படுகிறார்களா என்று பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.