கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் இறந்த சம்பவம் போதைக்கு மக்களை அரசே அடிமை ஆகியிருக்கிறார்களா?

அரசியல் உணவு செய்தி சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 21, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக இருந்து வந்துள்ளது. இது இன்று நடந்து, இப்படி 40 பேர் குடித்து இறந்ததாக இருக்க முடியாது. இது ஆண்டு கணக்கில் இந்த கலாச்சாராயம் இந்த பகுதியில் இருந்து வந்துள்ளது. கலாச்சாராயம் காவல்துறைக்கு தெரியாமல் நிச்சயமாக நடக்காது. காவல்துறையும் ,கட்சிக்காரர்களும் சேர்ந்து தான் இந்த வியாபாரத்தை நடத்தி இருப்பார்கள் .அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. இங்கே கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் இறந்து இருக்கிறார்கள்.

எதிர்கட்சிகள் இது பற்றி இன்றைய சட்டமன்றத்திலே முதல் கேள்வியாக அதுதான் இருக்கப் போகிறது. ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்வார்? என்பது தெரியவில்லை. இது உண்மையிலே ஒரு வருத்தமான சம்பவம் தான். அதற்கு 10 லட்சம் இழப்பீடு கொடுத்து விட்டார் அவர்கள் குடும்பத்திற்கு, அது போல் பல உயிர் இழப்பு சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. அதற்கெல்லாம் முக்கியத்தவம் தராத ஸ்டாலின், இதற்கு மட்டும் ஏன் இவ்வளவு தொகை ?என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டது .

ஏனென்றால், டாஸ்மாக் கடை மூலம் பல்லாயிரம் கோடி வருமானம் வருகிறது. அவர்கள் குடித்தால் தானே வருமானம் வரும். அதனால், ஒரு சின்ன தொகை தானே இது, அதனால் கொடுத்துவிட்டார் தாராளமாக ,ஆனால், பாதிப்பு என்பது பற்றி இவர்களுடைய கட்சியினரும் உணர மாட்டார்கள்.

இருவரும் உணர மாட்டார், எத்தனை பேர் செத்தாலும் கவலை இல்லை. அப்படி தான் இருக்கும் . அதற்கு ஒரு பதில் வைத்திருப்பார்கள். அதுதான் திமுக. நேற்று கூட ரயிலில் பயணம் செய்யும்போது, மக்கள் எவன் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவன் கட்சிக்காரன் சாப்பிடுவதற்கு தான் ஆட்சி நடத்துகிறார்கள் என்று பொதுவெளியில் பேசுகிறார்கள். மக்களுக்காக ஆட்சி இல்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். மேலும், 

வாக்களிக்கும் மக்களை எல்லாம் இந்த அரசியல் கட்சிகள் முட்டாளாக்கி வருகிறார்கள் என்றுதான் தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு கள்ளக்குறிச்சி எஸ்பி ஐ மாற்றிவிட்டார்கள் .அது எந்த கட்சி வந்தாலும், இதை தான் செய்யும். கட்சிக்காரர்களை காப்பாற்றுவார்கள்.

காவல்துறையும், அதிகாரிகளையும் பழி வாங்குவார்கள். கலாச்சாராயம் ஒருபுறம், டாஸ்மாக் ஒரு புறம் இப்படி எல்லாம் இருந்தால், மக்கள் எப்படி உழைக்க முடியும், அந்த குடும்பத்திற்கு எப்படி வருமானம் வரும்?கலாச்சாராயம் மலிவாக கிடைக்கிறது .டாஸ்மாக் குவாட்டர் ரூபாய் 150 /-எதை வாங்குவார்கள் ? 

இதையெல்லாம் சிந்திக்காத ஸ்டாலின், சில அதிகாரிகளும், பொதுமக்களும் இவர் நிர்வாகத் திறமை அற்றவர் என்றுதான் தெரிவிக்கிறார்கள். உண்மையிலே இவர்களுக்கு வாக்களித்த மக்கள் சிந்தித்து வாக்களித்தார்களா? அல்லது இந்த காசுக்காக வாக்களித்தார்களா? அதன் விளைவு அந்த மக்களிடமே வந்து சேர்ந்துள்ளது என்பதை அவர்களே புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *