நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram
சென்னை கிண்டி மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் இன்று தமிழக முழுதும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கையில் எடுத்தனர்.
இது தவிர, இது பிரச்சனைக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நோயாளி அந்த நோயாளியின் மகனோ அல்லது பாதுகாவலரோ இவ்வாறு நடந்து கொண்டது அல்லது நடந்து கொள்வது தவறான ஒன்று. ஏனென்றால், டாக்டரும் மனிதர்கள் தான். அவர்கள் ஒன்றும் கடவுள் அல்ல. அவர்களால் முடிந்த அளவுக்கு ஒரு உயிரை காப்பாற்ற தான் நினைப்பார்கள். அது அவரவர் திறமைக்கும், தகுதிக்கும் ஏற்றவாறு ஒரு நோயாளியை அவர்களால் பார்க்க முடியும்.
100% எந்த மருத்துவரும் ஒரு நோயாளியின் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஏனென்றால், மருத்துவம் என்பது முடிந்த அளவுக்கு ஒரு முயற்சி தான் . அதில் ஒவ்வொரு டாக்டரும் அவரவர் கற்ற படிப்பினை, அனுபவம், திறமை இதை பொறுத்து தான் அவருடைய முயற்சி. அந்த நோயாளிக்கு அவர்களால் கொடுக்க முடியும். அதனால் ,எந்த ஒரு டாக்டரும் இந்த நோயை இவர் குணப்படுத்தி விடுவார் என்று 100% சான்று கொடுக்க முடியாது. ஒருவருடைய உடம்பு இன்னொருவருக்கு இருக்காது. அதன் வேதியல் தன்மை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். இங்கே நோயாளியின் மகன் அந்த டாக்டரை கடவுள் என்று நினைத்தது தவறு.
அவரால் முடிந்தது முயற்சி செய்வார். சிலருக்கு குணமாகலாம். சிலருக்கு குணமாகாது .இப்படி பல்வேறு சிக்கலான முயற்சி தான் மருத்துவர் தொழில். அதில் ஒவ்வொரு டாக்டரும் ,ஒவ்வொரு விதமான அணுகுமுறையை நோயாளியிடம் கையாள்வார்கள். சிலர் அன்பான முறையில் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வார்கள் .அதிலே பாதி நோய் நோயாளிகளுக்கு குணமாகும்.ஒரு சில மருத்துவர்கள் ஏனோ, தானோ என்று கடமைக்கு செய்வார்கள். இவர் எந்த வகையை சேர்ந்தவர் என்று தெரியாது. இதில் எந்த பக்கம் தவறு உள்ளது? என்பது பத்திரிகையிலும் எழுத முடியாத ஒன்று.
ஏனென்றால் ஒரு பக்கம் டாக்டரை கத்தியால் குத்துவது தவறு .மற்றொரு பக்கம், அவர்கள் தவறான சிகிச்சை தன் தாய்க்கு அளித்ததாக மகன் சொல்லும் வாக்குமூலம் அதையும் பார்க்க வேண்டி உள்ளது. ஏனென்றால், ஒரு மகனுக்கு தாய் உயிரினும் மேலானவள். அந்த வேகத்தில் உணர்ச்சிவசப்பட்டு செய்தது தவறுதான்.அந்த தவறு டாக்டரிடம் இருக்கிறதா? என்பதுதான் ஆய்வு செய்து பார்க்க வேண்டிய ஒன்று.
ஆனால், இதை மருத்துவ சமூகம் ஏற்றுக் கொள்ளாது. மருத்துவர் உடைய தவறான சிகிச்சையால் ஒரு உயிர் போனாலும், அதற்கு காரணம் காட்டி மருத்துவர்கள் எழுதி வைத்து விடுவார்கள் .ஒன்றும் சொல்ல முடியாது. ஒட்டுமொத்த மருத்துவர் சமூகமும் ஒருமித்த குரல்தான் இதற்கு எழுப்புவார்கள்.
அதனால், இது நீதிமன்றத்தில் தான் இப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். மேலும், இந்த பிரச்சனையால் தமிழக அரசு இனி நோயாளியின் காப்பாளர்கள் அல்லது உறவினர்கள் இனி கையில் டேக் இல்லாமல் மருத்துவமனையில் நோயாளிகளை சென்று பார்க்க முடியாது என்று தமிழக அரசு இதற்கு ஒரு முக்கிய உத்தரவு எல்லா மருத்துவமனைகளுக்கும் போடப்பட்டுள்ளது.