ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram
தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், பத்திரிக்கை துறையின் அவலங்கள் குறித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதற்கு எவ்வித நடவடிக்கையும், மத்திய, மாநில அரசிடமிருந்து இதுவரை இல்லை. மேலும்,புகார் மனுவாகவும் அனுப்பப்பட்டுள்ளது. எமது வழக்கறிஞர் நோட்டீஸும் இரண்டு முறை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை தமிழக அரசும், மத்திய அரசும் தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறது . காரணம் இதற்கு பின்னால் அரசியலா? மேலும், நாங்கள் கேட்பது எங்கள் உரிமை, எங்கள் உழைப்புக்கு ஏற்ற அரசின் அங்கீகாரம். ஆனால், இதைத் தொடர்ந்து புறக்கணிக்கிறது என்றால், மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றத்தை நாடுவதை தவிர, வேறு வழி இல்லை. மேலும், சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அதுதான் சமூக மாற்றம். அதுதான் சமூக நீதி. இதை பலமுறை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் வாயிலாக, செய்தித்துறை உயர் அதிகாரிகளுக்கு விளக்கமாக இணையதளத்திலும், மக்கள் அதிகாரம் பத்திரிகைகளிலும், தெளிவாக குறிப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்குலேஷன் பற்றி எந்தெந்த பத்திரிக்கை? எவ்வளவு சர்குலேஷன் என்பதை நீதிமன்றத்தில் அதிகாரிகள் சொல்லும் போது, அப்போதுதான் நீதித்துறைக்கு தெரிய வரும். ஏனென்றால், சர்குலேஷன் இல்லாத பத்திரிகைகளுக்கு எல்லாம் அரசின் கோடிக்கணக்கான விளம்பரங்கள், சலுகைகள் கொடுத்து மக்களுடைய வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் விற்பனையாகாத பத்திரிகைகளை வாங்குபவர், அவர் சொல்கிறார் எனக்கு தினமும் கால் டன் இந்து (Hindu) பத்திரிக்கை வருகிறது என்கிறார் .
அப்போது எவ்வளவு அச்சாகிறது ?எவ்வளவு விற்கிறது? எவ்வளவு ரிட்டன் வருகிறது? இதுவே இந்த லட்சணம் என்றால், மீதி இருக்கின்ற பத்திரிகைகள் எந்த லட்சணம்? என்பது மத்திய, மாநில அரசின் செய்தி துறை அதிகாரிகளுக்கு புரிந்து இருக்கும் .எனவே, இந்த சர்குலேஷன் என்ன? என்பது மக்களுக்கும் ஓரளவுக்கு தெரியும். இப்படி பொய்யான தகவல்களை ஆடிட்டர் ரிப்போர்ட் மூலம் கொடுத்து, வாங்குகின்ற சலுகை, விளம்பரங்கள் எத்தனை? பத்திரிகைகள் எது? என்பது நீதிமன்றத்தில் கேட்கும் போது, தெரிந்து கொள்வார்கள்.
காலம் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த உலகத்தை வழிநடத்தக்கூடிய காலத்தை பணிந்து கேட்டுக்கொள்கிறேன். நடுநிலையான நீதி! நீதிமன்றத்தில் எங்களுக்கு கிடைக்க வேண்டும். அது பத்திரிக்கை துறைக்கு கொடுக்கப்படும் சமூக நீதியாக இருக்க வேண்டும். மேலும், செய்தி துறையில் அநீதிக்கு கொடுக்கப்பட்ட கால விடியலின் முற்றுப்புள்ளி ஆக அது இருக்க வேண்டும் .
இது சமூக மாற்றத்திற்கான வெளிப்படை நிர்வாகத்தை அரசு நிர்வாகத்தில் மற்றும் அரசியலில் புதிய கட்டமைக்கும் திட்டங்களாக, பத்திரிக்கை துறைக்கு உயிர் கொடுக்கும் ஊன்றுகோலாக இந்த தீர்ப்பு அமைய வேண்டும் என்று நீதித்துறை சார்பில் வைக்கின்ற முக்கிய கோரிக்கை.
ஆசிரியர் .