பொதுவாக சித்தர்கள் தனக்காக வாழாமல் பிறருக்காகவும்,உலகிற்காகவும் வாழ்ந்த அவர்கள் நடமாடும் தெய்வங்களாக அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர்.
அப்படிப்பட்ட மகான்கள், சித்தர்கள் இப்போது எங்கே என்று தேட வேண்டி உள்ளது? ஆனால்,சித்தர்கள்,மகான்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உடல் மட்டுமே இல்லையே தவிர, அவர்களுடைய சக்தி மிக்க இறையருளும், அந்த ஜோதியும் எப்போதும் அதேபோல் தான் மக்களுக்காகவும், உலகிற்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய பூதவுடல் தான் அழிகிறதே தவிர, அவர்களுடைய இறை ஆத்மா என்றும் அழிவதில்லை. அது பரம்பொருள் சொரூபமாக பஞ்சபூதங்களில் ஐக்கியமாக விளங்குகிறது. மேலும்,சேஷாத்திரி சுவாமிகள், நல்ல ஆத்மாக்களை தேடி, நல்லது செய்பவர். நீங்கள் நல்ல ஆத்மாவாக இருந்தால், உங்களைத் தேடி சூட்சமமாக அவரே வருவார்.
இல்லையென்றால்,அவருடைய ஆசிரமத்திற்கு உன்னை அழைப்பார். அது உனக்கும் புரியாது. மகானுக்கு மட்டுமே, இவனுக்கு இதை செய்யலாம் என்று அவருக்கு தோன்றி விட்டால்,சுவாமி அவருடைய ஆசிரமத்திற்கு வந்து தங்க வைப்பார். வணங்க வைப்பார். தவிர,எத்தனை முறை அந்தப் பகுதியில் நீ போனாலும் அதைப்பற்றி கண்டு கொள்ள மாட்டார். இதுதான் சேஷாத்திரி சுவாமிகள்.
அவருடையஅற்புதங்கள் சுவாமி என்ன செய்வார்? எப்படி செய்வார்? என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. மேலும் ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டு சுவாமிகள் அற்புதங்கள் பல அக்காலத்தில் செய்தவர் . அவர் செய்த அற்புதங்கள் யாராலும் செய்ய முடியாத ஒன்று. மேலும்,தீர்க்க முடியாத பிரச்சனைகள், வேதனையான துக்கங்கள் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் மகன்தான் சேஷாத்திரி சுவாமிகள்.
அன்பான,எளிமையான,கருணையே வடிவான,சுவாமிகளின் அருள் கொடுப்பினை இருப்பவர்களுக்கு மட்டும் தான் அது கிடைக்கும். அந்த பாக்கியம் முற்பிறப்பில் சுவாமியுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ,அது எந்த நேரத்தில்?எந்த காலகட்டத்தில்? அவர்களுக்கு அது கிடைக்குமோ அப்போது சுவாமி அதைக் கொடுப்பார் .
மேலும்,சுவாமியின் அற்புதங்களை அவருடைய நாமத்தை சொல்லி அவரை வணங்கும் பக்தர்களுக்கு மட்டும் தான் இது புரிந்த உண்மை. ஆசிரியர்.