நாமக்கல் மாவட்டம்,பெருமாள் கோயிலை திறக்க அமைதி பேச்சுவாா்த்தை நடத்தக் கோரிக்கை .

அரசியல் ஆன்மீகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram

எருமப்பட்டி அருகே பூட்டப்பட்ட பெருமாள் கோயிலை திறக்க அமைதி பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பீமநாயக்கனூரில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் பழமையான பெருமாள் கோயில் உள்ளது. ஒரு சமுதாயத்துக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் பூஜை செய்வதில் பிரச்னை உள்ளது.கோயிலை நிா்வகிக்கவும், தனிப்பட்ட ஒரு நபரின் கட்டுப்பாட்டில் உள்ளதை கமிட்டி உருவாக்கி ஒப்படைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் தனிப்பட்ட நபா் அந்தக் கோயிலை முழுமையாக பூட்டியதால், கோயிலில் மக்கள் வழிபாடு நடத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, உடனடியாக, நாமக்கல் கோட்டாட்சியா் மூலம் அமைதி பேச்சுவாா்த்தை நடத்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும். மேலும், கோயிலுக்காக உருவாக்கப்படும் கமிட்டியிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிா்ப்பு: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், இருக்கூா் – மாணிக்கநத்தம் சாலையில் கல்லாக்குத்து பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாவட்ட வருவாய் அலுவலா் நேரடியாக இந்த இடத்தைப் பாா்வையிட்டு சுத்திகரிப்பு ஆலை அமைக்க உகந்த இடம் அல்ல என தெரிவித்து விட்டாா். இங்கு கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைந்தால் 5 கிராம மக்கள் பாதிக்கப்படுவா். விவசாய நிலங்கள், நிலத்தடி நீா் கடுமையாகப் பாதிக்கப்படும்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக சுத்திகரிப்பு ஆலை அமைவதற்கு தடை விதிக்க வேண்டும் என பரமத்தி வேலூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சேகா், பொதுமக்கள் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ச.உமாவை சந்தித்து திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பள்ளிக் கழிப்பறைக் கட்டடம் மாயம்: பரமத்தி வேலூா் வட்டம், சேளூா் செல்லப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ின்றனா். அண்மையில், ‘உங்கள் ஊரில் – உங்களுடன் ஒரு நாள்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா், அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, செல்லப்பம்பாளையம் பள்ளிக்கு சென்றபோது அங்கிருந்த மாணவா்களுக்கான கழிப்பறை இல்லை. தலைமை ஆசிரியரிடம் பொதுமக்கள் கேட்டபோது, கழிப்பறைக் கட்டடம் இங்கு முன் இல்லை என்ற பதில் வந்தது.

இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம், மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்த வேண்டும். மாணவா்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனா்.கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிா்ப்பு தெரிவித்து மனு அளிக்க வந்த பரமத்தி வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சேகா், பொதுமக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *